பக்கம்:அமுதவல்லி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 அமுதவல்லி


   "ஓ , அப்படிங்களா?" சுப்பையா அப்படியே சிலையாகி நின்றான். உள்ளங்கையில் ஒளிந்திருந்த அந்த ஒரு ரூபாய் நோட்டு அவன் மனக் கண்ணில் நிழலாடியது. அந்த நிழலின் பின்னணியிலே. பசி விசுவரூபம் கொண்டு நிழல் காட்டியது. மறுகணம் அவன் தன் விழிகளை மூடினான்,
   வீரபாரதம் தலைநிமிர்ந்து நின்றது.
   பிறந்த பொன்னாட்டின் தாய் மண்ணைக் காத்திட, தருமத்தை நிலைநாட்ட, தங்கள் இன்னுயிர் களைத் தியாகம் செய்த வீரச்செம்மல்களின் அமர நினைவு சத்தியத்தின் ஓருருக்கொண்டு தலை திமிர்ந்து நின்றது.
  மெய்ம் மறந்து நின்றான் அவன். அஞ்சலி முத்திரை வடிவம் கண்டது. அவன் தன்னுணர்வு கொண்டு கண் திறந்தான்; கண்கள் பொடித்தன.
   பிறந்த பொன்னாட்டை நினைச்சு நன்றிக் கண்ணீரோடு பேசுற பேச்சு இது. தாய்த் திரு நாட்டுக்காக நான் மட்டுமல்ல. எங்க குடும்பமே எப்பவும் கடமைப்பட்டது என்கிற நடப்பையும் நான் உணர்ந்திருப்பவன். தேசப் பாதுகாப்பு நிதிக்கு உங்ககையிலே அள்ளி அள்ளிக் கொடுக்கணுமென்கிற மனசு இருக்குங்க, அண்ணன் ஆனா..ஆனா, இப்போதை என்னாலே இந்தச் சின்னஞ்சிறு தொகையைத் தான் கொடுக்க முடிஞ்சுது!” என்று உணர்ச்சி வயப்பட்டுச் சொல்லிக்கொண்டே மூடியிருந்த உள்ளங்கையைத் திறந்து, அதில் அம்பலக் கூத்துப் போல ஒளிர்ந்த அந்த ஒரு ரூபாய் நோட்டை ஊராட்சித் தலைவர் குலுக்கிய உண்டிப் பெட்டியிலே சமர்ப்பித்தான் சுப்பையா; கையெடுத்துக் கும்பிட்டான்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/60&oldid=1376213" இலிருந்து மீள்விக்கப்பட்டது