பக்கம்:அமுதவல்லி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 65

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. ஒருமுறை, அவளை நானும் தான் சந்தித் திருக்கிறேன். அது ஒரு தனிக் கதை, அது போய்த் தொலை யட்டும். எதற்கு இந்தப் பேச்சு வந்தது?. ஒஹோ!... சரி. அவ ளுடைய எழிலை மெய்ப்பிக்கச் சொன்ன பேச்சாகி விட்டது!

ஆம்: அவள் அப்படித்தான் ஈடு எடுப்பற்ற அழகுடன் விளங்கினாள். இத்துணை லாவண்யம் பெற்றிருப்பதையே ஒரு பாக்கியமாகவும், அந்தப் பாக்கியத்தையே ஒரு வரப்பிரசாதமாகவும் அவள் கருதி யிருந்தாள். இதில் தவறு இருக்க முடியுமா? அந்த அழகுக்கும் மகத்துவம் பிறந்தது. மணிகண்டன் அவளுக்கு உண்டான ரூப அழகை உபாஸிக்கத் தயாரானான். அதற்காகத் தானே இவ்வளவு தூரம் அவன் ஓடிவந்தான்!

அந்தி முல்லையென வந்து நின்றாள் மோஹினி.

அவளை உள்ளத்திலிருந்து வெளியே எடுத்துப் பதுமையாக்கி அழகு பார்த்து ரசித்துக் கொண்டி ருந்த மணிகண்டன் அவளை நேரில் கண்டதும், ஒரு சில வினாடிகள் தடுமாறினான். புது இடம், புது உணர்வுகள் ஆட்கொண்டிருந்த வேளையுங் கூட, இருக்கத் தானே இருக்கும்? -

“மோகினி!.. இல்லை! மோஹினி" என்று உச்சரித்தான் அவன்.

அவள் நகையொலியில் நாணம் பூத்தது. 'மூக்கு பில்லாக்கு' ஆடி அசைந்தது. செக்கச் சிவந்த உதடு களின் கங்குச் சிவப்பு பிர மாதமாக இருந்தது.

பூசனைக் கூடத்திற்கு அவனை அவள் அழைத்துச் சென்றாள். நாட்டிய உடுப்புக்கள் திகழ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/67&oldid=1375271" இலிருந்து மீள்விக்கப்பட்டது