பக்கம்:அமுதவல்லி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 67

பானத்தை ஆர்வத்தோடு குடிக்க விழைந்து ஆனந்தத்தோடு கை நீட்டிய நேரம் பார்த்துத் தனா, அந்த ஈ அதில் விழுந்து தொலைக்க வேண்டும்? ஐயையோ!... என் வாழ்வே சிதைந்து விட்டதே?. என் மனமே சித்தம் குலைந்து விட்டதே: நாடகக் கலைஞன் போன்றிருந்த அந்த ஆணழகன் கார்? அவன் துள்ளி வந்து அவளது பூங்கரம் பற்ற வேண்டுமென்றதால், அதற்கும் கதை - காரணம் என்று ஒன்று இருக்கத் தானே வேண்டும்?...மோஹினி 'இரு மனப் பெண்டிர்' இனத்தைச் சார்ந்த விலை மகள் என்பதை மெய்ப்பித்து விட்டாளோ? ....

தேதிப்படத் தாள்கள் கபளிகரம் செய்துவிட்ட காலத்தின் பத்தாண்டுச் சரித்திரத்தைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பவர்கள் என்னைப் பற்றியும் கட்டாயம் அறிந்து வைத்திருப்பார்கள்.

“இவ்வளவு தூரம் என்னைப் பற்றிப் பிரமாதப் படுத்திக் கொள்ளுகிற நான், இந்த நண்பர் மணிகண்டனைப் பற்றி அப்படிப் பெரிதாக எவ்வளவு தொலைவு புரிந்துகொண்டிருக்கிறேன்?. இந்த ஒரு கேள்வி எழுந்து, எழுந்த அவசரத்திலேயே என்னைத் திக்கு முக்காடவும் செய்து விட்டது. காரணம் இல்லாமல் இல்லை :- மோஹினி நல்லவள். பெண் மனத்தின் மெல்லிய உணர்விழைகளால் வண்ணமும் இதயப் பரிசுத்தத்தால் சுகந்தமும் இரண்டறக் கலந்து விளங்கியவள். அவளைப் பற்றிய என்னுடைய கணிப்பு இது. இப்படியிருக்க, அவளைத்தாறு மாறாக அவன் ஏசலாமா? பேசலாமா? தூற்ற லாமா? காற்றில் தூற்றப் பெற்ற உமியென நினைவு பாடிப் பறக்கத் தலைப்பட்டது. என் தலை கனத் தது. தலைவலி, அவ்வளவே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/69&oldid=1375311" இலிருந்து மீள்விக்கப்பட்டது