பக்கம்:அமுதவல்லி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 அமுதவல்லி

மோஹினி வாஸ்தவமாகவே மோஹினிப் பேயோ?

மோஹினி இவ்வளவு கெட்டிக்காரியா?...

தேனில் விழுந்த ஈயாக உருவம் எடுத்து வந்து நின்று அவளைப் பார்த்தான் மணிகண்டன், “என்னையே நொடிப் பொழுதிற்குள்ளாக அழித்து ஒழித்து விடப் பார்த்தாயே, மோஹினி?" என்று தழுதழுக்கக் கேட்டான்.

அவன் பிறப்பித்த வினாவைச் சட்டை செய்யாமல், அவனையே உறுத்துப் பார்த்தாள் அவள். பிறகு, மெல்லுணர்வுச் சிரிப்பை உதறினாள்.

அவனுக்குத் தலைகால் புரியாத மகிழ்வு. அவனைப் பார்த்து அவள் சிரித்துவிட்டாளல்லவா? உடனே, அவள் நின்ற பக்கமாக கால்களை எடுத்து வைத்து நடந்து, பதவிசுடன் அவளுடைய காந்தள் மென்விரல்களைத் தொட்டு, ஏதோ சொல்ல வாயெடுக்க விழைந்த வேளை கெட்ட வேளையாக இருக்க வேண்டும். காரணம் இதுதான்: பாவம், அவன் தன் வலது கன்னத்தைத் தடவித் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தான். விரல் நகங்களில் ஈரம் சொட்டியது. ‘மோஹினி!’ என்று அடித் தொண்டையில், சுவடு தெரியாமல், கூப்பிட்டான்.

அவள் பொருட்படுத்தாமல், தரையை நோக்கிக் குனிந்தாள். மேலாடை விலகி விழுந்த அழகை வெறி பாய்ச்சி ரசித்தான் மணிகண்டன், மோகம் தலைக்குச் சாடிவிட்டிருக்க வேண்டும். மறுபடி, அவள் முகம் விழிநோக்கில் பட்டதும். பட்டு வெட்டப்பட்டது போல, நறுக்கென்று தலையைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/72&oldid=1376589" இலிருந்து மீள்விக்கப்பட்டது