பக்கம்:அமுதவல்லி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 91

தியாகம்’ என்ற பெயர் சூட்டுகிறார் இவர். இதை நான் ஒப்பாதவன். தியாகம் என்பதுகூட ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் மாதிரி தான். சுய விளம்பரத்தினால் தியாகம் விலைபோகுமென்றோ, அல்லது தியாகத்தின் கதை பரவலாக ஒலிபரப்பப்படு மெனவோ எண்ணினால், அது மடமை என்பது என் கருத்து ஆடிப் பிழைக்கும் லவிதம் போட்டவளுக்கு இப்படிக்கூட, ஞானோதயம் தோன்றுமா என்று: நீங்கள் தற்சமயம் கருதுவீர்களானால்கூட அதிசயம் கொள்ள மாட்டேன் நான். குப்பையில் புதைந்து கிடைக்கக்கூடிய குன்றிமணிக்கு தன் வாழ்வே ஒரு சிருஷ்டித் தத்துவம் என்றேன், அதுவே: படைப்பின் புதிர்ச் சக்தியென்றோ தெரியவும் கூடா தல்லவா? இப்படிப்பட்ட வாழ்வின் பிசிறுத் தத்துவ உள்நோக்கங்களையும் புறவாழ்வுப் பொலிவுகனையும் கண்டு தெளிந்தவர்கள் பலர் சொன்னதைப் படித்து வருகின்றவள் தான்!...

“பெண்ணின் உள்ளமானது ஆழியைக் காட்டிலும் ஆழம் அதிகமுடையதென்பதாக எழுத்தாளர்கள் எழுதி வருகின்றார்கள். நீங்கள் கோபிக்கலாகாது. நீங்கள் கூடி ஒருமுறை இவ்வாறு உவமை காட்டியிருக்கிறீர்கள். பெண் உள்ளம் ஆழமுடையதாக இருப்பது தவறு என்று நீங்கள் வாதாட முடியுமா? ஆழமாகயிருப்பது ஒன்றுதான் பெண்மைக்கு ஏற்றம் தரவல்லது என்பது என்னுடைய பணிவான எண்ணமாகும். ஆழத்தில் தான் அமைதி இடம் காண்கிறது. இவ்வுண்மைக்குச் சரித்திர-சாத்திர தத்துவங்களை ஆதாரமாகக் கேட்க மாட்டீர்களே?

"என் கேள்விகளில் தேங்கிக் கண்சிமிட்டும் சூட்டைத் தாங்கள்" உணராமல் இருக்கமாட்டீர்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/93&oldid=1376482" இலிருந்து மீள்விக்கப்பட்டது