பக்கம்:அமுதவல்லி.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இவை எஸ். ஆறுமுகம் 95

அவதாரம் கொண்டாராமே? அதற்கும் உனக்கும் தொல்வினைத் தொடர்பு ஏதாகிலும் உண்டா?

ஐயோ! ... நான் தோற்றுப் போனேன்!

மோஹினிக்குக் கல்யாணம்!

உண்மையாகவே எனக்கு அப்படித் தான் புலப்படுகிறது. இந்த மோஹினி அசல் மோஹினி யாகவே தான் இருக்கவேண்டும். அவளுடைய அவதார மகிமையின் விளைவாக, துன்ப விளைவுதான் ஏற்பட்டாக வேண்டுமென்று இருக்கும் போலும்!

குப்பை இருக்கிறது. அதிலிருக்கின்ற குன்றி மணிக்கு ‘சுக்கிரதசை வாய்ப்பதையொப்ப, அனாம தேயன் ஒருவனுக்கு இந்த வாழ்வு கிட்டுவதென்றால். அதற்கு என்ன பெயரிட வேண்டும்?

ஒரு விஷயம் ஞாபகத்திற்கு வருகிறது.

அஞ்சன வண்ணன் இராமபிரான் அயோத்தி மாநகரை விட்டு நீங்குவதற்கு விதியின் பிழை தான் காரணமெனச் சுட்டுகிறார் கவிச்சக்கரவர்த்தி அதே போல், இந்த இளைஞன் இன்பசாகரன் எழில் ராணி மோஹினியை இன்பம் துய்க்கும் பேறு கொள்ளக் காத்திருப்பதுக - விதியின் பிழை” யாகவே இருக்கலாமோ? பிழை திருத்தும் நான் , சிருஷ்டிச் சுவடிகளின் தலையில் கைவைக்கத் துணிந்து விட்டதாக உங்களில் யாரும் அன்பு கூர்ந்து கருதலாகாது!

இன்பசாகரன் பிச்சைக் காரன். மோஹினியின் ஆட்டத்தைத் தரிசித் திருக்கிறான். அதுவே, அவனுக்குத் தேவ தரிசனம்’ ஆகவும் தோன்றியிருக்க வேண்டும். உடனே அவன் என்ன செய்தான், தெரியுமா? வழி மறித்த தடைகளை வழி விலக்கி விட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/97&oldid=1376523" இலிருந்து மீள்விக்கப்பட்டது