பக்கம்:அமுத இலக்கியக் கதைகள்.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71


கொடையாளிக்குச் சற்றே முகம் மலர்ந்தது. நண்பன் தன் துயரத்தைப் போக்க வழி காட்டினான் என்று எண்ணினன். 'புலி வாழும் காட்டுக்குள் போய் அதற்கு இரையாகலாம். கொடுப்பதற்கு ஒன்றும் . இல்லாமல் இந்த உடம்பைச் சுமந்துகொண்டு வாழ்வதைவிட, இதுவே நலம்’ என்று அவன் நினைத்தான்.

மறுநாள் தன் வீட்டில் உள்ளவர்களுக்கும் ஊரவர்களுக்கும் அவன் ஒரு செய்தியைச் சொன்னன். "நான் காட்டுக்குள் சென்று புலியைக் குத்திவிட்டு வரப் போகிறேன்" என்றான். ஊரவர் அவனைக் கண்டு வியந்தனர். மனைவியும் பிற சுற்றத்தாரும் முதலில் தடுத்தனர். ஆனால், வீர மரபினராதலால் அவனுடைய மிடுக்கான வார்த்தைகளைக் கேட்டுச் சும்மா இருந்துவிட்டனர். அவன் வேலோடும் வாளோடும் புறப்பட்டான். "துணைக்கு யாரும் வரவேண்டா" என்று சொல்லி விட்டான். அவன் வெற்றியுடன் திரும்பி வரவேண்டுமென்று யாவரும் வாழ்த்தினர்.

செட்டி பிள்ளையப்பன் புறப்பட்டுக் காட்டுக்குச் சென்றான். புலியைக் குத்திக் கொல்லப் போகவில்லை; தன்னையே மாய்த்துக்கொள்ளத்தான் போனன். ஆகையால் சிறிதும் அச்சமின்றிக் காட்டுக்குள் நுழைந்தான். எங்கெங்கோ சுற்றியும் புலி கண்ணில் படவில்லை. பகல் நேரத்தில் புலி வெளியே வராதென்பது அவன் நினைவுக்கு வந்தது. 'காட்டின் நடுவேயுள்ள குன்றில் எங்கேனும் அது ஒளிந்திருக்கும்' என்று எண்ணிக் குன்றை நோக்கிச் சென்ருன். மரங்கள் அடர்ந்து இருண்டிருந்த அந்தப் பகுதியில் புலியின் உறுமலை எதிர்நோக்கிப் போனான். ஆனால், மனித அரவம் கேட்டது அவனுக்கு வியப்பாக இருந்தது. தன் ஊர்க்காரர்கள் புகுவதற்கு அஞ்சும் இந்தக் காட்டில் யார் வந்திருக்கக்கூடும் என்று யோசித்தான். சற்றே