பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/12

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

12


கடவுள், மனம் வாக்குக் காயத்துக்கு எட்டாதவர் என்பதன்றே முதுமொழி! அம் முதுமொழி உண்மையாயின் நிர்மலனுக்கு உருவம் ஏது? உருவம் இல்லையேல் அதற்கு வண்ணம் கற்பித்து அது நீல நிறம் என்று நிர்ணயிப்பது எங்ஙனம் பொருந்தும் ? ஏன் கவி நீலநிற வானத்தையும் நிர்மலனையும் தொடர்புப் படுத்திப் பாடினார் என்ற குழப்பமான நிலை வரப் பெறுவர் சிலர், ஆனால், கவி என்றால் அற்புதம் புரிபவன், ஆகவே அவன் அறிந்தே கூறி இருப்பான்; கவி அருள் பெற்றவன், ஆகவே அவன் கூறுனது உண்மையாக இருந்தே தீரவேண்டும் என்று முடிவு செய்துவிடுவர். இதனால் விளைந்த பயன் என்ன? கவிதைகளைப் போற்ற பாராட்ட முன்வந்தனரே யன்றி, உணர, ரசிக்க, இலயிக்க, மக்களால் முடியவில்லை. கலையைக் காட்சிப்பொருளாக்கினரேயன்றி வாழ்க்கைக்குத் தோழனாக்கிக் கொள்ளமுடியவில்லை. கவிதையை இந்நிலையில் வைத்திருக்குமட்டும், கவிகளின் ஆழ்ந்த கருத்துரைகளால் ஏற்படவேண்டிய பலன் உண்டாக வழியில்லாமற் போய்விட்டது. புராணங்களில் மட்டுமே குறிப்பிடப்படும் பாரிஜாத புஷ்பத்தை நம் காதலிக்குத் தர முடியுமோ! அது போலாயிற்றுக் கவியின் நிலை.

இந்த நிலையைக் குலைத்து, எதிர்த்துப் புரட்சி செய்து, கலையைக் கைப்பிடித்திழுத்து வந்து நம் எதிரே நிறுத்தி, “இதோ உன் தோழன்” என்று கூறிப் புரட்சி செய்தவர், அதில் வெற்றி பெற்றவர் பாரதிதாசன்.

பலவேறு துறைகளிலே நடைபெற்றன புரட்சிகள். தேவ குமாரன் அரசனாகப்பிறப்பான், அவனை