பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

புரட்சிக் கவிஞர்




புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் என்று சொல்லியவுடனேயே இன்முகங்காட்டி எங்கே என்று எதிர் பார்க்கும் இளைஞர்கள் பலரைத் திருச்சிப்பாசறையிலே கண்டோம். ‘அக்காட்சி சிங்க இளைஞனே திருப்பு முகம்! திற விழி’ என்று கவிஞர் சொல்லிய சொற்றொடரின் எதிரொலி என்போம், போர்ப்படை நடத்திப்பாசறையமைத்துப் பகைவரைக்கொன்று வெற்றி பயந்து நிற்கும் தார்வேந்தனைப் பரணிபாடி மகிழ்விக்கும் பாவலன் வீரர்களிடையே தீரம்பேசி நிற்பது திராவிட நாட்டின் முந்தைநாள் பண்பு அதுபோலப், புரட்சிக் கவிஞரின் உணர்ச்சிக் கருத்துக்கள் தூவப்பட்ட உள்ளத்தினால் உந்தப்படும் இளைஞர்கள் ‘வளமார் எமது திராவிட நாடு வாழ்க வாழ்கவே!’என்ற திராவிட நாட்டுப் பண்ணைத் தெருவெல்லாம் முழக்கம் செய்ய வீறிட்டெழுந்துள்ளார்கள். அந்த வெட்டாத கத்தியினை வீசாக்கையால் வெடுக்கென்று தூக்கி எமை வீழ்த்தப் பார்க்கும் முட்டாள்கள் வைதிகர்கள் குருக்கள் சூழ்ச்சி முனையழிய நடமாடி நாட்டு மக்கள் கட்டோடு சமத்துவத்தைத் தரவும் இன்பக் கருத்தளிக்கும் சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்ற பேரொலியை எங்கணும் எழுப்பத் துடிக்கின்றார்கள். பழைமையில் நெளியும் பாமரரும் பண்டிதரும், பணம் பிடுங்கும் கூட்டத்தினரும் அங்நிலையைக் கண்டு மனங்கலங்குவர். யார் விரும்பினாலும், விரும்பா