பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17

விட்டாலும், தடுத்தாலும் தடுக்காவிட்டாலும், எதிர்த்தாலும் எதிர்க்காவிட்டாலும் பகுத்தறிவுணர்ச்சி பரவியே தீரும். அது காலத்தின் கோலம். கருத்தின் வேகம்.

உரையாடலிலே ஒப்புக்கொண்டு மேடைப்பேச்சிலே வெளிப்படுத்த மறந்து போகும் விரிந்த மனப்பான்மையையுடைய' தேசீயத் தோழர்கள் பலரும் ஒப்புக்கொள்ளுகின்ற நிலைக்காவது வந்திருப்பது, தடுத்தும் தாண்டிப் பாய்ந்த உணர்ச்சி வெள்ளத்தின் விளைவு என்போம். நாளும் நாளும் செல்லவொழிந்தால் ஏது.நினைந்து என்ன செய்வாரோ என்று பயங் கொண்டு நயங்கேட்கக் காத்துக் கொண்டிருக்கும் பண்டிதர்கள் சுற்றி வீற்றிருக்க,கவிஞரின் கவிதை ஒன்றைப் படித்துக்காட்டி இது தான் கவியாம்! இதில் தான் இலக்கணம் இருக்காம்! இதைப்பாடியவர் தான் கவியாம்!' என்று கேலிக்குரலிலே இழித்துக்கூறிய பண்டித மணியார் வாழும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலே 'பாரதிதாசன்' படம் திறந்து வைக்கப்பட்டது என்றால், கவிஞரின் கவிதை கல்லூரி மாணவர்களின் கருத்திலே எத்தகைய புரட்சியை எழுப்பி யிருக்க வேண்டும்!

புரட்சிக்கவிஞரின் கவிதைகளிலே உள்ள கலையழகையும், கவிநயத்தையும், கருத்தின்பத்தையும் பகுத்தறிவு பாதையில் நடக்கக் கற்றுக்கொண்ட பண் பினரேயன்றி மற்றையோர் போற்றார் - உணரார். காலத்திற்கு ஒட்டிய கருத்துக்களை முன்னேற்றப் பாதையிலே ஓட்டி, படித்தவரோடு பாமரரையும், பாட்டாளி மக்களையும் சேர்த்து இழுத்துச் செல்கின்