பக்கம்:அமெரிக்காவில் ஒரு பாரதிதாசன்.pdf/8

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

8

மளிப்பது. இலக்கியம் வாழ்வின் விளக்கமாய், உயிருடன் ஒட்டுவதாய் இருத்தல் வேண்டும்,


  உடலுறுதி, உள்ள உரம், கருத்துப் பொலிவு, கருத்து விடுதலை, கலைப்பண்பு, பயன் தரும் தொழில் ஊக்கம், நல்ல நட்பு, ஈகை, சுரண்டுவதற்குப் பயன் படாத (மனிதத்) தொடர்பு, சாதிமதப் பிடிவாதமற்ற வீறுநடை, பணத்திமிரற்ற உறவு, இவையே குடி அரசின் குணங்கள்! குடி அரசு பொருளைவிட, மனிதனை மேன்மையாக மதித்திட வேண்டும்.


நான் உலக மக்களில் ஒருவன் செருக்கற்றவன்! கள்ளமற்ற வெள்ளை உள்ளம்! எவருடனும் செல்வேன் கைகோர்த்து/ களிப்புடன் வானத்தை நோக்கி வணங்கி வரம் கேட்பதில்லை. உழைத்து வாழ்கிறேன். ஊரை ஏய்த்தல்ல இருப்பதைக் கொடுக்கிறேன். மற்றவர்க்கும். மக்களின் தோழன் நான் புலவரிடமல்ல பாடங் கேட்டது, எனக்கு ஆசிரியர் எளியோர், அவர் தரும் பாடத்தைப் பேராசிரியர்களுக்கு நான் போதிக்கிறேன்.


காற்று எங்கும் வீசும், நானும் அப்படியே எங்கும் உலவுவேன். ஏழை பணக்காரன், புண்யமூர்த்தி பாபாத்மா, பத்னி பரத்தை ஆண்டான் அடிமை என்ற வேறுபாடு எனக்கு இல்லை, பருவ மழைபோல் பலருக்கும் பயனளிப்பேன்.


மனிதரனைவரும் எனக்கு ஒன்றே! எவருக்கும் அஞ்சேன். எதற்கும் அழேன், எதையும் தொழேன். சடங்கும் சாமி கும்பிடுதலும் எனக்கில்லை. என்னை நான் உணர்ந்தேன்! தொல்லையில்லாத விடுதலை பெற்றவன் நான்! எந்தக் குருவிடமும் மன்னிப்புக் கேட்கத் தேவையில்லை. நான் மோட்சந்தேடவில்லை.