பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

107 செல்லலாம்? எந்தப் பொருள் மலிவாகக் கிடைக்கும்? என்ற அன்றாடக் கேள்விகளுக்குப் விடை கூறுவன அன்றாடம் வெளிவரும் நாளிதழ்களே. மேல்குறித்த செய்திகள் எல்லாம் வெளிவருவதாலும், பத்திரிகைக் காகிதம் மிகக் குறைந்த விலைக்குக் கிடைப்ப தாலும், பெரிய பத்திரிகைகள் தாமே பத்திரிகைக் காகிதம் உற்பத்தி செய்யும் ஆலைகளை வைத்திருப்பதாலும். அமெரிக்காவில் தினசரிப் பத்திரிகைகள் நாள்தோறும் 48 பக்கங்கள் கொண்டனவாயும், ஞாயிறன்று, புத்தக உருவில் சிறுவர்களுக்கான பகுதியுள்பட 350 பக்கங்களும் இரண்டு கிலோ நிறையும் உள்ளதாகவும் இருக்கின்றன! இதனால் ஓர் ஆண்டுக்கு ஓர் அமெரிக்கருக்கு 40 கிலோ பத்திரிகை காகிதம் செலவாகிறது. இது ஒவ்வோர் அமெரிக்கரும் வாங்கும் சர்க்கரையின் நிறையைவிட மிகுதியாம்! தினசரிப் பத்திரிகை முழுவதையும் படிக்க ஒருவருக்கும் நேரம் இல்லாததால், அமெரிக்கப் பத்திரிகைகள் இரண்டு பத்திகளில் அட்டவணை வெளியிட்டு, வெளிநாடுகள், உள்நாடு, ஐக்கிய நாடுகள் சபை, பொருளாதாரம் விளை யாட்டுக்கள் என்ற தலைப்புக்களில் குறிப்பான செய்திகளைக் கொட்டை எழுத்துக்களில் தருகி கின்றன. விளம்பரங்களை அறியவும் ஓர் அட்டவணை உண்டு. உ சங்கிலித் தொடர் ஒரே முதலாளி அல்லது கம்பெனி பல நகரங்களில் பத்திரிகைகள் நடத்துதல் 'செயின் முறை முறை' எனப்படும். இம்முறையால் அப்பத்திரிகைகள் மாத்திரம் உரிமைபெற்ற தனிப்பட்ட செய்திகளையும் படங்களையும் சிறந்த கட்டுரை களையும் முறைப்படி நிறைய வெளியிடமுடிகின்றது; செலவும் குறைகிறது. செலவு முழுவதையும் ஈடுசெய்யும் அளவுக்கு விளம்பரங்கள் வாயிலாக வருவாய் கிடைக்கிறது. இக் காரணங்களால் பல பக்கங்களுள்ள பத்திரிகைகளைக் குறைந்த விலையில் வெளியிட அமெரிக்கரால் இயலுகிறது.