பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 முறை, படம் பார்ப்பவர்களின் உரிமையைக் கட்டுப்படுத்து கிறது. ஆனால், நினைத்த நேரத்தில் படம் பார்க்க வாய்ப்பு வேண்டுமென்பது அமெரிக்கரின் மனப்பான்மை யாகும். இந்த மனப்பான்மைக்கு ஏற்றவாறு அமெரிக்காவில் காலை 11 மணிமுதல் மறுநாள் காலை 4 மணிவரை, இடை வேளையே இல்லாமல், தியேட்டர்களில் ஒரே படத்தை மீண்டும் மீண்டும் பன்முறை காட்டுகின்றனர். ஆதலால் படம் பார்க்கப் புதிதாக வருபவர் எப்போதும் உள்ளே வந்துகொண்டும், பார்த்து முடித்தவர் எப்போதும் வெளியே போய்க்கொண்டும் இருக்கிறார்கள். ஒவ்வொரு வரும், தாம் விரும்பிய நேரத்தில், தியேட்டருக்குள் சென்று அப்போது நடந்த பகுதி மறுமுறை வந்தவுடன் எழுந்து சென்று விடுவர். பார்த்ததையே திருப்பித் திருப்பிப் பார்க்கும் பழக்கமும், பண்பாடும், அதற்கு வேண்டிய பொறுமையும் அமெரிக்கரிடம் கிடையா. இவற்றைத் தவிர, பல அலுவல்களுக்குப் போதிய நேரமின்றித் துன்பப்படும் அமெரிக்கர், பார்த்த பகுதியை அல்லது படத்தை மீண்டும் பார்ப்பதில் நேரத்தை வீணாக்குவதில்லை. ஆதலால், அவர்கள், தாமே எழுந்து போய்விடுவார்கள். தியேட் டருக்குள் சென்றவரை வெளியே அனுப்புவதற்காக, வேலையாட்கள் நியமிக்கப்படுவதில்லை. படம் பார்ப்பவர் களின் கண்களைப் பாதுகாப்பதற்காக முதல் வரிசைகூடத் திரையிலிருந்து 12 மீட்டர் தொலைவுக்கப்பால் தான் அமெரிக்கத் தியேட்டர்களில் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரே வகுப்பு ஒரே கட்டணம் என்ற கொள்கையைப் பெரும்பாலும் எல்லாத் தியேட்டர்க்காரர்களும் கையாளு கிறார்கள். பெரும்பாலும் 40 செண்டும் சில தியேட்டர்களில் 80 செண்டும் உள்ள டிக்கட்களையே விற்கிறார்கள். அமெரிக்கச் சமூகத்தில், பல வகுப்பினரிடையே வேறுபாடுகள் மிகக் குறைவாக இருப்பதாலும், எல்லோருமே அமைதியாயும்