பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கூடமும் வெளியிடும் கண் கவரும் கையேடு, அதை நாம் பேணி வைத்துக் கொள்ளத் தூண்டும். சிறுவர் பள்ளிகள் உ மாணவர்களை உயிரினக் கூடங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு படம் வரையும் வகுப்பு நடத்துகின்றன என்பதை முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். சான்பிரான்சிஸ்கோவிலுள்ள உயிரினக்கூடம் 'கோல்டன் கேட்' பூங்காவனத்துள் இருக்கிறது. இந்தச் சாலை ஒரு மிலியன் டாலர், அதாவது 471 லட்சம் ரூபாய் மூலதனத்தோடு தொடங்கப்பட்டதாம். பலவகையான உயிரினங்களை மிகச்சிறு உருவத்தில் நெகிழிப் பொருள்கள் (Plastics), ரப்பர் ஆகியவற்றில் செய்து இவர்கள் விற் கிறார்கள். 26. விளையாட்டுக்கள் நல்வாழ்வுக்கு உடற்பயிற்சி இன்றியமையாதது. உடற் பயிற்சி செய்வதால், உடலிலுள்ள உறுப்புக்கள் வன்மை யடையும்; இரத்த ஓட்டம் மிகும்; பசி உண்டாகும்; கழிவுப் பொருள்கள் உடலினின்றும் நீங்கும்; உடலின் தசைகள் நன்கு வளரும். இவற்றால் உடலுக்கு வலிமையும் அழகும் உண்டாகும். உடல் நோயில்லாமலிருக்கும். விளையாட்டின் பயன் மேற்கூறியவை தவிர, மூளை வேலை செய்யும் ஒருவனுக்கு விளையாட்டின் வாயிலாக ஓய்வு கிடைக்கிறது.காற்றோட்ட முள்ள இடங்களில் சிறிது நேரத்தைக் விளையாட்டுக்களால் வாய்ப்புக் கிடைக்கிறது. கழிக்கவும் உள்ளக் கிளர்ச்சியும் மகிழ்ச்சியும் உண்டாகும் வலிமை தரத்தக்க விளையாட்டுக்கள் பல உண்டு. அமெரிக்கர் இவ் விளையாட்டுக்களை வயது வரும் வரையின்றி ஆயுள் முழுவதும் ஆடுகிறார்கள். அந்நாட்டு இளைஞர் நம் நாட்டு இளைஞரைக்