208 27. ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் ஒரு வாரம் நியூயார்க்கிலிருந்து 400 கி.மீ.மைல் தொலைவில் உள்ள கொலம்பஸ் நகரில் இருக்கும் ஓஹையோ மாநிலப் பல்கலைக் கழகத்தில், நான் ஒருவாரம் இருந்தேன். அது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க காலப் பகுதி எனலாம். என் நான் விரிவாகப் பார்த்த பல்கலைக்கழகம் ஓஹையோ தான். பிற பல்கலைக்கழகங்களை நீக்கி, இதை நான் தேர்ந்தெடுத்துக் கொண்டதற்குக் காரணம், இராசம்மாள் தேவதாஸ் என்ற என் இனிய நண்பரொருவர் அங்கிருந் ததே யாகும். அவர் அப்பல்கலைக்கழகத்தில் அப்போது மனை இயல் கல்வி பயின்று வந்தார். இந்திய அரசினரால் உணவு ஆராய்ச்சி செய்ய அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்ட அவர் அங்கே, எம். எஸ்ஸி. பட்டம் பெற்று, டாக்டர் என்னும் உயர்தரப் பட்டம் பெற அப்போது ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் உணவின் ரகசியம் என்ற தமிழ் நூலை இயற்றியவர்; தமிழ், ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளில் ஆழ்ந்த தேர்ச்சியுடையவர்; ஓய்வுநேர மெல்லாம் தமிழ்ப் பண்பாட்டை அமெரிக்காவெங்கும பரப்பி யிருக்கிறார். ஓஹையோ மாநிலச் சட்டமன்றம் அவருக்கு அவர் மாணாக்கராக இருந்தபோதே - பாராட்டுப் பத்திரம் படித்துக் கொடுத்தது, இந்தியப் பல்கலைக்கழகங்களில் டி.எஸ்.சி. பட்டம் பெற்ற முதல் மாணவர் இவரேயாவார். கொலம்பசில் நான் சந்தித்த யாவரும் அவ்வம்மையாரின் நுண்மாண் நுழை புலத்தையும், சுறுசுறுப்பையும், எளிமையை யும், அனைவரையும் தன் வயமாக்கும் கவர்ச்சியான பேச்சுத் திறனையும், பிற பல ஆற்றல்களையும் பாராட்டி வியந்தபோது, "திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும்" என்ற பாரதியாரின் கனவு நனவாகி யதை உணர்ந்தேன். 66
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/210
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை