பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

217 அழைத்துச் சென்று மின்சார அடுப்பை எனக்கு இயக்கிக் காட்டினார். தம் மாமியாரையும் எனக்கு அறிமுகப் படுத்தினார். நன்றிகூற ஓர் ஆண்டுவிழா வியாழக்கிழமை, நன்றி நவிலும் நன்னாள் (Thanks- giving Day) ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து நூறாயிரக்கணக்கானவர் குடியேறியதைக் குறிக்கும் ஆண்டுவிழா நாள்; செல்வத்திற் சிறந்து விளங்கும் அமெரிக்க மண்ணில் குடியேறியதற்காக அமெரிக்கர் அனைவரும் ஆண்டவனுக்கு நன்றி செலுத்தும் நாள். அதனை உழவுக்கும் தொழிலுக்கும் நன்றி செலுத்தும் தமிழ்நாட்டுப் பொங்கலைப் போன்ற விழா எனக் கூறலாம். அது அமெரிக்கரின் நாட்டு வணக்கப் பெருநாள். ஆண்டுதோறும் நவம்பர்த் திங்களில் நான்காவது வியாழக்கிழமையன்று அது நிகழும், நாடெங்கும் அன்று விடுமுறை நாள். அமெரிக்கருக்கு மிகச் சிறப்பான நாட்களில் அது ஒன்று. குடும்பத்து உறுப்பினர் அனைவரும் ஒருங்கே கூடி மகிழும் அந்நாள் 1621 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்நாளில் கிறித்தவ ஆலயங்களில் சிறப்பான வழிபாடுகள் நிகழ்கின்றன. அந்நாளில், அமெரிக்கர் அந்நாட்டு உணவாகிய வான்கோழி இறைச்சியை (ஏழு கிலோ எடையுள்ள வான்கோழி அமெரிக்க நாட்டின் சிறப்பான பறவை) நாம் பொங்கலன்று சர்க்கரைப் பொங்கல் உண்பது போல் உண்பர். வேளாண்மைப் பண்ணை வெள்ளிக்கிழமையன்று, 1,000 ஏக்கர் நிலப்பரப்பும் இக்காலத்துக்குரிய கட்டிடங்களுமுள்ள பல்கலைக்கழகத்துப் பண்ணையைப் பார்வையிட்டேன். அது மிகச் சுகாதாரமான நிலையில் பேணப்பட்டு வருகிறது. அங்கே தேனீக்கூடுகளை கோழிப்பண்ணைகளையும் மாட்டுப்பண்ணைகளையும் யும் 14-அ