32 காட்டாக ரிடக்சன் - இன்-டாக்சஸ் (Reduction in taxes) என்பதற்கு டாக்ஸ்-கட் (Tax Cut) என்றே அமெரிக்கர் கூறுவர். எனவே, அமெரிக்கர் கையாளும் ஆங்கிலமொழி தனித்த இயல்புடையது. ஐந்து டாலர் நோட்டு என்பதற்கு ஐந்துடாலர் 'பில்' என்று சொல்லுவார்கள். ரசீது பில் என்பதற்கெல்லாம் 'செக்' என்று சொல்லுவார்கள். 'பி.ஏ.' என்பதற்கு 'ஏ.பி.' என்பர் அமெரிக்கர். பெட்ரோல் என்பதற்கு அமெரிக்கர் 'காசோலீன்' என்றும், ரயில்வே என்பதற்கு 'ரயில்ரோடு' என்றும், 'லிமிடெட் கம்பெனி' என்பதற்கு 'கார்ப்பரேஷன்' என்றும், 'லக்கேஜ்' என்பதற்கு 'பாகேஜ்' என்றுங் கூறுவர். அமெரிக்கர், சில சொற்களில் பயன்படுத்தும் எழுத்துக்களும் வியப்பைத் தருவன. அவற்றுள் இரண்டை இங்கே கூறலாம். Night=Nite; Cheque = Chek. பேசுவதுபோல் எழுதவேண்டும்; பேசப்படும் மொழிக் கும் எழுதப்படும் மொழிக்கும் வேறுபாடு இருத்தல் கூடாது என்பது அமெரிக்கரின் கட்சி. இக்கருத்தையே காலஞ் சென்ற அறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா ஆதரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அரசியல் சட்டத்தில் ஏழு (இந்திய அரசியல் சட்டத்தில் 395) பிரிவுகள் தான் உள்ளன. நேரத்தைச் சிக்கனம் செய்யவும், பலருக்கு நேரும் துன்பங்களைத்தவிர்க்க வும், அமெரிக்கர் தங்களுடைய நீட்டல், நிறுத்தல்,முகத்தல், நாணய அளவுகளைத் தசாம்ச முறையில் அமைத்திருக் கின்றனர். இந்த முறைப்படி, அமெரிக்காவில் ஒருமைலுக்குப் பத்துப் பர்லாங்குகள் உள்ளன; ஓர் அந்தருக்கு 100பவுண்டு களும், ஒரு டன்னுக்கு 2000 பவுண்டுகளும் தான் உண்டு. டாலரின் சிறு பகுதிகளாகச் சதம் என்பது மட்டுமே உண்டு. 100 சதம் கொண்டது ஒரு டாலர். தபால் ஸ்டாம்புகளை ஒட்டியபின், 'ஏர் மெயில்' என்ற முத்திரைக்காக மற்றொரு சிறு காகிதத்தை ஒட்டுவது
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/33
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை