பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 பெண்டிரும் விளையாட்டுகளில் மிக்க விருப்பமுடையவர். இருபாலாரும் தமது முக்கிய அலுவல்களில் விளையாட்டை யும் ஒன்றாகக் கருதுகின்றனர். எல்லா விதமான விளையாட்டுகளிலும் பெண்களும் ஈடுபடுகின்றனர். பெரும் பான்மையான அமெரிக்கப் பெண்கள் மோட்டார்க் கார்களை ஓட்டுகின்றனர்; அமெரிக்காவில் ஆடவர் மோட்டார்க் கார் கள் ஓட்டும்போதுதான் பெரும்பாலும் விபத்துக்கள் நேர்கின்றனவாம்! ஆகாய விமானம் ஓட்டும் வல்லமையுள்ள ஏழாயிரம் அமெரிக்கப் பெண்டிர் இருப்பதும் சிறப்பாகக் குறிப்பிடத் தக்கது. விளையாட்டுக்கு அடுத்தபடியாக அமெரிக்கப் பெண்கள் தோட்டக் கலையில் மிகுந்த ஆர்வ முடையவராயிருக்கின்றனர். மணம் அமெரிக்காவில் மணம் செய்துகொண்டே ஆகவேண்டும். என்பதில்லை. இதனால், ஆண்களிலும் சரி, பெண்களிலும் சரி, வயது வந்தும் மணமாகாதவர் பல்லாயிரம் உளர். தத்தம் உரிமைகளை மனைவிக்கோ கணவனுக்கோ விட்டுக் கொடுக்கவும்,குடும்பப் பொறுப்பை ஏற்கவும் இவர்கள் விரும்பாததே இந்நிலைக்குக் காரணம். கல்லூரிப் படிப்பு முடிந்ததும், குடும்பப் பொறும் பேற்கக் கணவனைத் தேடும் வழக்கம் அமெரிக்காவில் இல்லை. இடையே சில காலம் ஏதாவதொரு வேலையில் பெண்களும் அமருவது முறையாகிவிட்டது. சராசரி 28 வயதில் ஒரு பெண் 25 வயதுள்ள ஓர் இளைஞனைத் திரு. மணம் செய்து கொள்ளுதலே அங்குள்ள வழக்கம். - அமெரிக்காவில் காதல் முறையில் மணம் நடைபெறு கிறது. ஒவ்வொரு பெண்ணும் தனக்கு விருப்பமுள்ள ஆண்மகனோடு பல மாதங்கள்- சிலர் சில ஆண்டுகள். வரை எல்லாத் துறைகளிலும் கூடிப்பழகி, ஒருவர் மற்ற வரின் பழக்கவழக்கம, விருப்பு வெறுப்பு, குற்றங்குறை --