52 பொழுது போக்காக, நாய் அல்லது பூனையை வளர்ப்பது பெண்களின் வழக்கம். பத்து அமெரிக்கப் பெண்களில் ஏழு பேர் பூனைகளை வளர்க்கின்றனர்; நான்கில் ஒருவர் பியானோ (Piano) என்னும் இசைக்கருவியை வாசிக் கின்றன ர். அமெரிக்க ஆடவரைப் போலவே பெண்டிரும் போதிய நேரமின்றித் துன்பப்படுகின்றனர். இதனால் அவர்கள் தம் நீண்ட கூந்தலை வளர்த்துப் பலவாறாகப் பின்னித் தொங்க விடுவதற்குப் பதிலாக ஆடவரைப் போலவே தாமும் தலை முடியைக் கத்தரித்து விடுகின்றனர். தத்தம் தேசத்துப் பெண்கள் தம்மைவிட எவ்வேலை யையும் மெதுவாகவே செய்வதாக எல்லா நாட்டு ஆடவரும் கருதுகின்றனர். அமெரிக்கப் பெண்களைப் பற்றியும், அந் நாட்டு ஆடவர் சிலர் இவ்வாறு என்னிடம் குறை கூறினர். எனினும், வேற்று நாட்டுப் பெண்டிரைவிட அமெரிக்கப் பெண்டிர் சுறுசுறுப்பானவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அமெரிக்காவில், எங்கும் எப்போதும் பெண்களுக்குத் தக்க மதிப்புக் கொடுக்கப்படுகிறது. ஓரிடத்திற்குள் செல்லும் போது ஆடவரே கதவைத் திறந்துவிட்டு, பெண் உள்ளே சென்ற பின்னரே தாம் செல்ல வேண்டும். ஓர் ஆண் ஒரு பெண்ணைச் சந்திக்கும்போது, அவளுடன் கை குலுக்குவதா இல்லையா என்பதை அவளே முடிவு செய்ய வேண்டும். இவை போன்ற நிகழ்ச்சிகள் மிகப் பல. இவற்றை விரிக்கிற் பெருகும். இந்த நூற்றாண்டில் அமெரிக்கப் பெண்களில் தலை சிறந்து விளங்கியவர் திருமதி எலியனார் ரூஸ்வல்ட், அமெரிக் கத் தலைவராயிருந்த ரூஸ்வெல்டிட்ன் மனைவி. முதிய வயதிலும் இவ்வம்மையார் பல துறைகளில் முற்றும் ஈடுபட் டிருந்தார். ஐக்கிய நாடுகள் குழுவிலும் வேறு பல இடங்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/53
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை