பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 களிலும் தாம் ஆற்றிய பணியால் திருமதி எலியனார் ரூஸ்வல்ட் அமெரிக்கப் பெண்களின் சிறப்புக்கு எடுத்துக் காட்டாக விளங்கினார். மை டே "My Day" என்ற தலைப்பில் இவ்வம்மையார் 1936 முதல் எழுதிய குறிப்பை (Diary) மிகப் பல அமெரிக்கப் பத்திரிகைகள் வெளியீட்டன. மக்கள்* அதைப் படித்து ஏறக்குறைய மகிழ்ந்தனர். ஒரு கோடி 4. பிரிஸ்கோ நியூயார்க்கிலிருந்து 5000 கி. மீ. தொலைவிலுள்ள சான் பிரான்சிஸ்கோவுக்கு 14 மணி நேரத்தில் 114 டாலர் செலவில் நான் ஒரு விமானத்தில்போய்ச் சேர்ந்தேன். நியூயார்க்கும் சான்பிரான்சிஸ்கோவும் நியூயார்க்கிலிருந்து சென்றதால் அந்த நகரை அளவு கோலாகக் கொண்டுதான் நான் இந்த நகரத்தைப் பார்த் தேன். நீண்ட பேச்சுக்கோ, நீளமான பெயருக்கோ நேர மில்லாத அமெரிக்கர் நியூயார்க் நகரத்தை 'NYC' என்பது போல் சான்பிரான்சிஸ்கோ நகரத்தையும் சுருக்கமாக பிரிஸ்கோ என்பர். நியூயார்க்கை போலவே பிரிஸ்கோவும் எந்த அமெரிக்க இராச்சியத்துக்கும் தலைநகராக இல்லாதது கவனிக்கத் தக்கது. இதற்குக் காரணம், பெரு நகரங்களிலுந் துறை முகங்களிலும் அரசியல் தலை நகரங்கள் இருந்தால், அங்கே யுள்ள வணிகர் அரசினரிடம் செல்வாக்குப் பெற்றுவிடக் கூடும் என்று அஞ்சி, அமெரிக்கத் தலை நகரங்கள் சிற்றூர்