பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 அப்பசுக்கள் தரும் பாலில் வெண்ணெய்ச் சத்து அதிகமாக இருப்பதாகவும், நாள்தோறும் மூன்று தடவைகள் பால் கறப்பதாகவும், ஒவ்வொரு தடவையும் சராசரி 13கிலோ நிறையுள்ள பால் கிடைப்பதாகவும், அந்தப் பண்ணையினர் எனக்குத் தெரிவித்தனர். கறந்தவுடன் பாலை ஓர் ஐஸ் பெட்டியில் வைத்து, அது 50டிகிரிவரை குளிரும்படி செய்கின்றனர். அதன் பின் பாலிலுள்ள 'பாக்டிரியா' என்ற நுண்கிருமிகள் 'பாஸ்சரைசேசன்' என்னும் முறைப்படி நீக்கப்படுகின்றன. அதன்பிறகு, கெட்ட நாற்றத்தைப் பாலிலிருந்து விலக்க சில விஞ்ஞான முறைகள் கையாளப்படுகின்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் பண்ணையிலேயே நிகழ்கின்றன. இவற்றின் இறுதியில், குறிப்பிட்ட பல அளவுகளுள்ள புட்டிகளில் பாலைஊற்றி, அந்தப் புட்டிகளுக்குள் காற்றுப் புகாதபடி 'சீல்' வைக்கப் படுகின்றது. இதன் பின்னரே, சில்லறை விற்பனைக்குப் பால் வெளியே கொண்டுபோகப் படுகிறது. இவ்வளவு எச்சரிக்கையுடன் தயாரிக்கப்படும் பாலின் விலை, எல்லா விலையும் மிகுதியாக உள்ள அமெரிக்கா வில் பால் விலை குறைவு. அமெரிக்கர் பாலில் தண்ணீரையோ, தண்ணீரில் பாலையோ கலப்பதில்லை; கலக்க இயலும் என்பதையும் அறியார். அதற்கு அவர்களுக்கு நேரமும் இல்லை. புட்டியில் பால் அடைப்பதைப் பற்றி பத்திரிகையில் யின்வரும் செய்தி வெளிவந்தது. ஓர் இத்தாலிய விஞ்ஞானி அமெரிக்காவில் புட்டி களில் பால் அடைக்கும் இயந்திரசாலை ஒன்றைப் பார்வை யிடப் போனார். அப்பொழுது அங்கே ஒரு குழாய் வெடித் ததினால் பால் எல்லாப் பக்கங்களிலும் சிதறி விழுந்தது. ஒரு கணங்கூடத் தாமதியாமல் ஒரு தொழிலாளி இயந்திரத்தை நிறுத்தினார்; இன்னொருவர் பழுதுபார்த்து முடித்தார். உடனே மீண்டும் வேலை தொடங்கிற்று. இதைப் பார்த்து வியப்புற்று இத்தாலிய விஞ்ஞானி