94 விடாதபடி, அவற்றைக் குளிரான நிலையிலே வைத்திருக்கா ஐஸ் பெட்டிகள் இருக்கின்றன. உடைகள் கடையிலேயே கொடுக்கப்படுகின்றன. உடைகளை மாற்றிக் கொள்ள காலையிலும் மாலையிலும் பத்துப் பத்து நிமிஷ நேரம் அனுமதிக்கப்படுகிறது. உடைகளைச் சுத்தம் செய்யவும், தையல் வேலைக்கும், கடையிலேயே தனி இடங்களும் ஆட் களும் உண்டு. வேலையாட்களை அழகு படுத்தவும் கடையில் ஒரு பகுதி உண்டு. வேலையாட்கள் நீதிபதிக்கு உதவி செய்யும் (Jury) வேலைக்குச் சென்றால், அந்த நாட்களுக்குச் சம்பளப் பிடித்தம் செய்வதில்லை. வேலைக்குப் போகுமுன் அன்றைய காலைப்பத்திரிகையில், அந்தக் கடையினர் வெளி யிட்டுள்ள விளம்பரங்களைப் படித்துக் கொண்டு போக. வேண்டும். வாடிக்கைக்காரர்களின் குழந்தைகள் கடைக்குள் காணாமற் போய்விட்டால் அக்குழந்தைகளை வைத்திருக்கக் கடைக்குள்ளேயே ஒரு குறிப்பிட்ட இடம் இருக்கிறது. அந்த இடத்துக்குக் குழந்தைகளைக்கொண்டு போய்ச் சேர்ப்பதும் வேலையாட்களின் கடமைகளில் ஒன்று. இரவு 7மணிக்குமேல், வேலை செய்பவர்களுக்கு, இரவு உணவுக்காக ஒரு தொகை தரப் படுகிறது. வேலையாட் களின் குடும்பத்தில் யாராவது இறந்தால் சவ அடக்கத்தின் போது கடையிலிருந்து இனாமாகப் பூக்கள் அனுப்பி அனு தாபத்தைத் தெரிவிப்பது வழக்கம், இக்கடைகளில் வேலை கிடைப்பது எளிதன்று. குறிப்பிட்ட உயரமும், பயிற்சியும் பொது அறிவும், கல்வித் தேர்ச்சியும் இனிய முகமும் பொ றுமையும் உடையவர்களுக்கே வேலை கிடைக்கும். வியாபாரக் கல்வி அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில், சில்லறை வியா பாரம் செய்வதைப் பற்றிய மேல் படிப்பு உண்டு.கணக்கு, வைத்திருக்கவேண்டிய முறை, நிதி நிர்வாகம், சாமான் கொள்முதல், புள்ளி விவரங்கள், விளம்பரங்கள் ஆகிய எல்லாப் பிரிவுகளையும் பற்றிய விவரமான பயிற்சி அளிக் கப்படுகிறது. விற்பனை வியாபார நிர்வாகக் கழகத்தான்
பக்கம்:அமெரிக்காவைப் பார்.pdf/95
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை