பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

நூலகங்களுக்கு நன்கொடையாகக் கொடுத்தனர். கி.பி. 1930-இல் 500,000 டாலர்கள் சூலியசு ரோசன் வால்டு நிதியிலிரைந்து (Julius Rosenwald Fund)கொடுக்கப்பட்டது. கி.பி. 1935-இல் அமெரிக்காவில் 6.235 பொது நூலகங்கள் விளங்கலாயின. இந்நூலகங்களிலிருந்த நூல்களின் மொத்த எண்ணிக்கை 100,470,215 ஆகும்.பொதுமக்கள் வீட்டிற்கு எடுத்துச் சென்றுபடித்த நூல்களின் எண்ணிக்கை 449,998,845 ஆகும்.

சமுதாய நல நூலகத் திட்டங்கள்

இந்நூற்றாண்டில் எண்ணிறந்த மக்கள் நூலக வளர்ச்சியின் பொருட்டு, நூலகத் துறையில் ஈடுபடலாயினர். மாநிலங்கள் யாவும் ஒன்றுபட்டுக் கூட்டுறவு முறையில் பணியாற்றத் தொடங்கின. சமுதாயநலத் திட்டங்களின் கீழ் நூலகத் திட்டமொன்று தீட்டப்பட்டது. இத்திட்டம் வெற்றி பெறுதற்கு 46,000-க்கு மேற்பட்ட மக்கள் பல வழிகளிலும் பணி புரியலாயினர். ஆறு ஆண்டுகளில் ஆற்றிய அரும் பணியினால் இத் துறையில் அற்புத கட்டடங்கள் பல நிகழலாயின. மக்களாலேயே 130 நூலகக் கட்டடங்கள் கட்டித் தரப்பட்டன. 832 நூலகங்கள் மக்களாலேயே புதுப்பிக்கப்பட்டன. சில மக்கள் நூலகங்களுக்குச் சென்று நூற்களைப் பழுது பார்ப்பதிலும் நூற்களே மக்களுக்குக் கொடுத்துதவுதலிலும், உதவி புரியலாயினர். குழந்தைக்களுக்கென ஒதுக்கப்படும் நேரங்களில், மக்களே குழந்தைகளுக்குக் கதை சொல்வாராயினர். பள்ளிகளுக்கும் சென்று நூலகப் பணி புரிந்தனர். இப்பணிகள் யாவும் பயிற்சி பெற்ற நூலகத்தார் பலரது மேற்பார்வையில் நடந்தன.

கி. பி. 1947 இல் எண்ணிறந்த மாநிலங்களுக்குத் திட்டங்கள் தீட்டப் பட்டன. மின்னி சோடா (Minnesota)