பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

மக்களுக்குமே அருந்துணை புரிந்து வருகின்றன. 1956-இல் இந்த நூலகத்தை 66,7000 மக்கள் பயன்படுத்தி யுள்ளனர்

இந்த நூலகம் தன் எல்லை கடந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் தொண்டாற்றி வருவது சிறப்புடையதாகும். நூற்கடன் (Inter Library Loan System) முறையில் இந்நூலகம் தனது நூல் பலவற்றை வெளி நூலகங்களுக்குக் கொடுத்து வாங்குகிறது. 1956-ஆம் ஆண்டில் மட்டும் உலகத்திலுள்ள பல நூலகங்கட்கும், காங்கிரசு உறுப்பினர்கட்கும், அரசினர்க்கும் ஏறத்தாழ 2,05,500 நூல்கள் கொடுத்து வாங்கியிருக்கிறது இப் பெரு நூலகம். இதுமட்டுமன்று; இதனுடையபடச்சுருள் துறை தன்னுடைய பல்வேறு படச்சுருள்களேயும் மக்களுக்கும் அறிஞர்க்கும் வழங்கி வருகிறது. மேலும் தேய நூலவட்டணை (National union catalogue) ஒன்று இந் நூலகத்தால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அந்நூலில் அமெரிக்கா, கானடா ஆகிய இரு நாட்டிலும் எழுநூற்றுக்கும் மேலாக விளங்கும் நூலகங்களிலே உள்ள 1956-ம் ஆண்டுக்கு முன் அச்சடிக்கப்பட்ட 3,500,000 நூல்களைப்பற்றிய குறிப்புக்கள் அடங்கியுள்ளன. சிலாவி, இப்ரூ, சப்பானி, சீனம் ஆகிய மொழிகளிலுள்ள 5,50,000 நூல்களைப்பற்றிய அட்டவணைக்கு அருந்துணை நூலவட்டவணை (Auxiliary union catalogue) என்பது பெயர்.

அமெரிக்காவிலே குருடர் நூலகங்கள் இருபத்தெட்டு நடைபெறுகின்றன. அவற்றுள்ளே ஒன்று காங்கிரசு நூலகத்தால் நாடு முழுவதும் பயன் படுமாறு நடத்தப்பட்டு வருகின்றது. பேசு நூல் (Talking Books) என்பது குருடர் பயன்படுத்துவது ஆகும். இத்தகைய நூற்கள் 13,95,000 அமெரிக்காவிலும் அதனுடைய