பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

music) நாடாக்கள் உள. அவற்றிலே சில இந், பட பாடல்களும் உண்டு; அமெரிக்கக் கவிஞர்கள் தானே பாடிய பாடல்களும் உண்டு.

அமெரிக்கக் கலைக் கழகத்தின் (Academy of Art & Sciences) துணை பெற்று இந்நூலகம் சில அசைப் படங்களைத் தாயரிக்கின்றது; மக்களுக்குக் கிடைக்குமாறு: செய்கின்றது. நிக்கோலாஸ் லாங்கோர்த் நிறுவனம் (Nicholas Longworth Foundation)போன்ற பல நிறவணகங்கள் சார்பிலே பல சிறந்த இசைவாணர்கள் இசையரங்குகள் நடத்தி வருகின்றனர். அத்தகைய இசையரங்குகள் நடைபெறுவது இந்தப் பெருநூலகத்திலே உள்ள கூடத்திலேதான். அக்கூடம் 1925-இல் கட்டப்பட்டது. அதற்குத் திருவாட்டி எலிசபெத் பண உதவி செய்தார். இந்தக் கூடத்திலே 511 இருக்கைகள் உள. உலகிலேயே சிறந்த இசைக் கூடம் இதுவென்றே சொல்வர்.

இக்கூடம் இலக்கியப் பேச்சுக்கும் பயன்பட்டு வருகிறது. நாடகம், கவிதை, இலக்கிய ஆராய்ச்சி,திறனாய்வு, உரைநடை முதலிய பல துறை வல்லுநர்களும் சந்தித்துச் சொற்பொழிவுகள் செய்யும் அரங்காகவும் இக்கூடம் பயன்பட்டு வருவது சிறப்புடைத்தரகும்.

அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் ஆட்சிக் குழுவின் கருத்துடன் காங்கிரசு நூலகத் தலைவரை ஏற்படுத் துகின்றார். இந்த நூலகத்திலே பணியாற்றுவோர் நூலகத் தலைவர் உட்பட 23000 பேர் ஆவர். இவர்களிலே பலதுறை வல்லுநர்களும் அடங்குவர். இந் நூலகத்தின் செலவுக்கு அரசாங்கமும் பிற தனிப்பட்ட நிறுவனங்களும் பல கோடிக்கணக்கான பவுன்கள் கொடுத்து வருகின்றன.