பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28


துண்டுத்தாளை (Call Slip) அளித்தபின் மு ப் ப து மணித்துகளுக்குள் நூல்வராவிடின் உடனே பணியாளை நாம் வினாதல் வேண்டும். இதுபோன்ற காலந்தாழ்ப்புக்களிலே, பணியாள் தாழ்ப்புக்குரிய ஏதுவை ஆராய்தல் வேண்டும்.

வேண்டிய நூல் கிடைக்காவிடில் துண்டுத்தாளின் பின்புறத்திலே அதற்குரிய ஏதுவை எழுதித்திருப்பி விடப்படல் வேண்டும். ஏது தவறாக இருப்பதாகச் சுட்டப்படின் பணியாள் மேலும் ஆராயத் தூண்டுவார்.

சிறப்பான தேடல் (Special Searches)

தற்காலிகமாகக் கிடைக்காத நூலுக்காகத் தனி முயற்சி எடுத்துத் தேடலும் உண்டு. இத்தகைய தேடலுக்குரிய தனி விண்ணப்பங்களும் உண்டு. வேண்டிய நூல் கிடைத்துவிடுமாயின் விரைவஞ்சல் மூலம் வேண்டியோர்க்கு அறிவிக்கப்படும். அதுமுதல் ஐந்து நாள் வரை அவருக்காக அந்நூல் எடுத்து வைக்கப்படும்.

படிப்பகத்திலே ஒருவர் தன்னுடைய படிப்பையும் குறிப்பெடுத்தலேயும் முடித்துவிட்டு வெளியேறுகையில் அவர் உடனே எல்லாநூல்களையும் திருப்பிக்கொடுத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவர் இருக்கை காலி செய்யப்பட்டுப் பின்வருவோர்க்கு ஆயத்தமாக்கப்படும்; நூல்கள் தட்டுக்களை அடைய முடியும்.

இடை நேரத்தின் போது நூல்களைக் காத்தல்

நூலகத்திலே பல நூல்களேயும் வைத்துக் குறிப்பு எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர், சற்று சோர்வு ஏற்படின் அவர் இருக்கையை விட்டெழுந்து ஏதேனும் நீர்