29
அருந்தச் செல்லலாம். அந்த நேரத்திலே நூலகப்பணியாள், ஒருவரும் இல்லையே என எண்ணி, நூல்களை யெல்லாம் எடுத்துச் சென்றுவிடலாம். இதனைத் தடுப்பதற்கு எனத்தனி விண்ணப்பங்கள் உண்டு. அவற்றை வருவோர் பயன் படுத்துவர்.
நூல்களைப் பலநாட்களுக்கு எடுத்து வைத்திருப்பது எப்படி?
ஒருசில நூல்களே நாம் பலநாட்களுக்குத்தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் அவை நூலகத்திலே எடுத்து வைக்கப்படும். இதற்கெனத் தனி விண்ணப்பங்கள் உண்டு. எடுத்து வைத்தலுக்குரிய விதிகள் வருமாறு:
1. ஒரு நூலை மூன்று நாளுக்கு மேல் எடுத்து வைக்க முடியாது.
2. ஒருவருக்கு ஒருநேரத்தில் மூன்று நூல்களையே எடுத்து வைத்தல் உண்டு.
3. குறிப்பு நூல்கள், கற்பனை நூல்கள் எடுத்து வைத்தல் இல்லை.
4. எடுத்து வைக்கப்பட்ட நூல்கள் உடனே தேவைப்படுமானால் எந்தவித அறிவிப்புமின்றி எடுத்துச் செல்லலாம்.
5. முதல் நாள் படிக்கப்பட்ட நூல்கள் மறுநாளும் படிப்பகத்திலே எடுத்து வைக்கப்படும்.
குறிப்பு நூலகம்
குறிப்பு நூலகத்திலுள்ள நூல்களெல்லாம் அடிக்கடி தேவைப்படுவனவாகும். அவற்றை நாம் நேராகவே எடுத்துப் படிக்கலாம். காங்கிரசு நூலகத்திலுள்ள படிப்-