32
இரு நாடுகளிலும் உள்ள எழுநூறு நூலகங்களிலுமுள்ள சிறந்த நூல்களின் பெயர்கள் இந்த நூற்பட்டியலிலே இடம் பெற்றுள்ளன. மேலும் இந்தப் பட்டியலிலே பிற நூலகங்களிலுள்ள நூற்பிரிவுகளையும் நாம் காணலாம். இவை பொதுப்பட்டியலிலே இடம் பெறா. இப்பட்டியலே ஆசிரியர் பட்டியல் என்றே அழைக்கலாம் ; ஏனெனில் இது பெரும்பாலும் ஆசிரியர் பெயர்களையே கொண்டிருக்கும்.
தனிநூற் பட்டியல்கள் அமெரிக்க நூலகங்களில் உள்ள தனித்தொகுதிகளைக் கொண்டதாகும். எபிரேயம், சிலாவிக், சப்பான், சீனம் ஆகிய மொழிகளிலுள்ள நூல்களுக்கெனத் தனிப்பட்டியல்கள் உள.
அட்டைத்துறை
நூல் அட்டைகளே அச்சடித்தல், விற்றல் போன்றனவற்றைச் செய்வது அட்டைத்துறையின் பணியாகும். பதினைந்து கோடிக்கு மேல் இத்துறை தன் அட்டைகளே விற்றிருக்கிறது. அட்டைகள் ஆசிரியர் வாரியாகவும், பொருள் வாரியாகவும், எண் வாரியாகவும் தயாரிக்கப்படும். வேண்டியவர் வேண்டியாங்கு வேண்டிய பிரிவுக்கு அறிவிப்புச்செய்து பெற்றுக்கொள்ளலாம்.
நிழல்படத்துறை
பலவகையான படங்களை இத்துறை கொண்டிருக்கும். படப்பதிப்புரிமையுடைய படங்களையே இத்துறை வெளியிடமுடியும். படத்தின் விலை பற்றிய விளக்கங்களை இத்துறையினரிடம் அறிந்து கொள்ளலாம்.
விற்பனையகம்
நூலகப் படிப்பகத்தின் அருகிலேயே விற்பனையகம் அமைக்கப்பட்டிருக்கிறது. நூலக வெளியீடுகள், நூலக,