35
அளித்து வருகிவருகின்றது.இதனால் ஆராய்ச்சியாளர்கள் பெருவாரியாக இந் நூலகத்தை நாடி வருகின்றனர். அதனால் இங்கு எப்பொழுதும் நெருக்கடி இருந்து கொண்டே இருக்கும்.
ஆராய்ச்சியாளர் தமக்குச் சலுகைகள் அளிக்குமாறு கடிதத்தின் மூலம் நூலகத்தலைவருக்கு விண்ணப்பம் அனுப்புதல் வேண்டும். ஆராய்ச்சி எதுபற்றிச் செய்யப்படும் என்பதையும் முன்னரே தெரிவித்தல் வேண்டும். பல்கலைக் கழகத்திலே வெறும் பட்டாதாரியாக இருந்தால் மட்டும் இந்த நூலகத்திலே ஆராய்ச்சிக்கு இடம் கிடைத்துவிடாது. பெரும்பாலும் காங்கிரசுக் குழுவினர், அரசினர் சார்பில் வருவோர் ஆகியோருக்கே இங்கே ஆராய்ச்சிசெய்ய வாய்ப்புகள் அளிக்கப்படும்.
படிப்பறைகள்
இணை மாளிகையிலுள்ள ஐந்தாம்மாடி, நூலக மாளிகை ஆகிய இடங்களிலே ஆராய்ச்சிக்குரிய படிப்பறைகள் உள. இவ்வறைகளெல்லாம் கூட்டாராய்ச்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளன. சிலபொழுது சீரிய ஆராய்ச்சி செய்வோராக இருக்கும் தனி மாணவரும் இங்கே ஆராய இடம் தரப்படுவர். பொதுப் படிப்பகங்களுக்கு அருகிலேயே ஆராய்ச்சியாளர்க்கெனத் தனிப் படிப்பகங்களும் அமைக்கப்பட்டிருக்கும்.
ஆராய்ச்சிப் படிப்பகங்கள், அறைகள் முதலியவற்றை மேற்பார்ப்பதற்கென்றே தனி அலுவலகம் உள்ளது. ஆராய்ச்சிக்கெனத் தனிக்குறிப்பு நூலகங்களும் உள.