பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

ஆர்வங்கொண்டு அவற்றைப் பாடும் நாட்டு விழாக்களையும் கொண்டாடி வருகின்றன.

இன்று ஏறத்தாழ 300 புதிய இசைத்தட்டுக் கடைகள் தோன்றிப் பல்லாயிரக்கணக்கான இசைத்தட்டுக்களைப் பரப்பி வருகின்றன. மேலும் இதுவரையிலும் வெளியாகாத,அதிகமாக உலவாத நாட்டுப்பாடல்களைப் பதிப்பதிலும் தனிஆர்வம் கொண்டுழைத்து வருகின்றன.

உலக நாட்டுப் பாடல் நூலகம் என்ற வரிசையில் கொலம்பிய இசைத் தட்டகம் 16 தொகுதிகளை வெளியிட்டுள்ளது. அது மொத்தம் 20 அல்லது 30 தொகுதிகளை வெளியிடலாம். 1958 ஆம் ஆண்டுக் கோடையிலே அயர்லாந்து, இங்கிலாந்து, காட்லாந்து,பிரான்சு, கனடா,ஆப்பிரிக்கா,ஆத்திரேலியா, இந்தோனேசியா, வெஞ்சுலா, சப்பான், கிழக்குக் கினியா, இந்தியா, பெயின், இத்தாலி, யூகோசுலோவியா ஆகிய நாட்டுப் பாடல்களையும் அது வெளியிட்டுள்ளது.

ஏற்பட்ட ஆண்டிலிருந்து காங்கிரசு நூலகத்திலுள்ள நாட்டுப் பாடல் மன்றம் நாட்டுப் பாடல்களைக் காப்பதிலும் அதிலே வேட்கை தோன்றுமாறு செய்வதிலும் வெற்றிமேல் வெற்றி பெற்று வருகின்றது.