பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. பல்சுவை வழங்கும் பல்கலைக்கழக நூலகம்

கல்வி களிநடம்புரியும் இடம் பல்கலைக் கழகம் அதன் சிறப்புக்கள் பல. அவற்றுள் குறிப்பிட்டத்தக்கவை சில. அச் சில சிறப்புக்களுள் ஒன்றே பல்கலைக் கழகம். பல்கலைக்கழக வளர்ச்சியுடன் அதன் நூலகமும் போட்டி போட்டுக்கொண்டே வளரும். அமெரிக்க நாட்டு வள்ளல்களுள் ஒருவர் ஆர்வர்டு. இவர் பெயரிலே நிலவுகின்றது ஒரு பல்கலைக் கழகம். அதனை ஆர்வர்டு பல்கலைக் கழகம் (Harvard University) என உலகம் அழைக்கும். அந்தப் பல்கலைக் கழக நூலகம் முதன் முதலாக முந்நூற்றெழுபது நூல்களோடு தொடங்கியது. அவற்றை அளித்தவரும் ஆர்வர்டு என்பவரே. இன்று அந்த நூலகம் ஆறுகோடி நூல்களைப் பெற்றுக் காட்சி அளிக்கின்றது. எந்தப் பல்கலைக் கழகமாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு பதினேழாண்டுகளுக்கும் அதன் நூலக நூல்கள் பொதுவாக இரண்டு மடங்கு பெருகி விடுகின்றன.

பல்கலைக்கழக நூலக வளர்ச்சி ஆயிரத்துத் தொளாயிரத்து நாற்பதுக்கு முன் ஒருவகையாகவும், பின் ஒருவகையாகவும் காணப்படுகிறது. முதன் முதலாகப் பல்கலைக் கழக நூலகம் சிறிய அளவிலேயே குறைந்த நூல்களைக் கொண்டு தொடங்கும். அஃதாவது ஒரு பொதுப் படிப்பகம், பாட நூலகம், நாளிதழ்கள் முதலிய பருவகால இதழகம், அரிய நூல்கள் உள்ள பகுதி, அரசறிக்கைப் படிப்பகம் ஆகியவற்றுடன் பல்கலைக்கழக நூலகம் முதலில் தொடங்கும். ஆனால்