பக்கம்:அமெரிக்க நூலகங்கள்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


பல்கலைக்கழக நூலக வளர்ச்சியின் அறிகுறி அண்மையில் ஏற்பட்ட பல்கலைக்கழக நூலகக் கூட்டுறவாகும். இத்தகைய கூட்டுறவுகள் தற்போது நாற்பதுக்குமேல் உள்ளன. நூல் கடன் தரல், நூலட்டவணை செய்தல், நூலகம் கணக்கிடல், கூட்டுறவாகப் படமெடுத்தல் ஆகியவை இந்த நூலகக் கூட்டுறவின் அடிப்படைகளாகும். வெளியீடுகள் பரிமாற்றம், அமெரிக்க உள்நாட்டு நூலக மாநாடு போன்ற உள்நாட்டு மாநாடுகள், நூலக மன்றங்கள் ஆகியவை மூலம் உலக நூலக உறவு வளர்க்கப்பட்டு வருகிறது.