பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கம்பரும் நண்பரும் உலாப் போந்த காதை 99


திருமணம் முடிக்கின் தீரும் கவலை

ஒருமன மாக உம்மோ டொத்துப்

பண்பொடு வாழ்வான் பாரும் என்று

நண்பர் கூற, நவில்வார் கம்பர்

(கம்பர்)


25. திருமணம் முடிப்பதாய்த் தெரிவித் தும்மவன்

மறுமணத் தோடு மாற்றம் விடுத்துத்

திரிமனத் தோடு திரிகிருன் என்ன


(நண்பர்)

கரும்பு தின்னக் கூலியா! கடிமணம்

விரும்பிய பெண்ணொடு முடிக்கென விளம்ப,

(கம்பர்)

30 அரசன் மகளாம் அமரா வதியை

முரசம் முழங்க முடித்திடு என்கிறான்.

நடப்ப தாவிது? நண்பரே உரைக்கென

விடுப்ப ஒருவினா, வியந்தார் நண்பர்.

அன்ன வேளை கற்பகத் தாச்சி

35 பண்ணியத் தோடு பருப்பும் பாலும்

உண்ணக் கொடுக்க உண்டனர் இருவரும்.

பின்னர்க் கம்பர் பீடுசால் நண்பரை

உலாவ அழைக்க, இருவரும் உள்ளம்

குலாவ நடந்தனர் குடதிசை நோக்கி.

40 தாய்வீ டேகும் புதுப்பெண் தானென,

ஆய்வுறு நூல்களை ஆசா னிடத்துப் 26. மறுமணம்-மறுக்கும் உள்ளம்; மாற்றம் - பதில். 28. கடி மணம் - திருமணம். 35. பண்ணியம் - இனிப்பு அப்ப வகை, 89, குடதிசை - மேற்கு. 41. ஆசான் - ஆசிரியர்.