பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




104

அம்பிகாபதி காதல் காப்பியம்

145 ஒன்றின்றி மற்றோன் றில்லையென் பீரேல்
நன்றென் வினாவிற்கு நவிலுதிர் நல்விடை
இறைவர் எங்ஙனம் இயன்று தோன்றினர்?
ஒருவரும் இலாதவர் உண்டான தெப்படி?
இறைவர் தாமே தோன்றினார் என்னின்,

150 முறையே உலகமும் உயிர்களும் முகிழ்த்துத்
தாமே தோன்றின என்னின் தகாதோ?
என்ற நண்பர்க் கிறுப்பார் கம்பர்:
கண்ணனாரே நீர் கருதவொன் றுளதால்;
திண்ணிய உமக்குத் தேர்ந்த விடைதரல்

155 ஒண்ணா துமக்கொன் றுரைப்பல் கேண்மின் !
'நம்பினோர்க்கு நடராசா நம்பாதார்க்கு எமராசா’
என்னும் பழமொழி எங்கும் வழங்குவது
இன்னும் அறியீரோ? ஏனித் தடைவிடை?
என்ற கம்பர்க் கிறுப்பார் நண்பர்:

160 விளையாட் டாயிதை வினவினேன் கம்பரே!
உளையா தீருளம் இன்னுமொன் றுரைப்பல்
அம்பிகா பதியெனை அடுத்தே ஒருநாள்
நம்பகம் மறுப்பவன் போல நடித்திதை
வம்பாய் வினவினன்; வாய் வா ளாமே,

165 கம்பரைக் கேட்டுக் கழறுவேன் விடையென
அம்பி காபதிக் கன்றுயான் அறைந்தேன்
அதன்விளே வேயிஃ தன்றிமற் றிலையென,
அதன்பின் இருவரும் அவணின் றகன்றே
இல்லம் நோக்கி ஏகிய போது

170 பல்வகை நிகழ்ச்சிகள் பார்த்துப் போந்தனர்:
பல்லி பாங்கர்ப் படுதொறும் பரவி


147. இயன்று - இயலக் கூடியதாகி - முடியக் கூடியதாகி. 150. முகிழ்த்து - உண்டாக்கி. 155. ஒண்ணாது - முடியாது; கேண்மின் - கேளுங்கள். 161. உளையாதீர்- நோகாதீர்; உளம் - உள்ளம். 164. வாளாமே - பேசாமல். 168. அவனின்று - அங்கிருந்து. 169. ஏகியபோது - சென்றபோது. 171. படுதொறும் - ஒலிக்குந்தோறும்; பரவி - கடவுளைத் துதித்து.