பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர்கள் களிப்புறுTஉம் காதை

115



புரையறு காதலர்ப் புல்லச் செய்த அரைகுறை வென்றியோ டகன்றனன் காமனும்.

210 காதலர் இருவரும் களிப்பொடு சென்றபின் சூதுறு அமைச்சொடு சோழன் வந்தனன் சோலை முழுதும் சுற்றிச் சுற்றி வேலைதே டுவோர்போல் வீணாய் அலைந்தனர் நீண்ட நேரம் நேடித் திரிந்தும்

215 காண்டல் இன்றிக் கடிந்தனன் சோழன்; என்னுடை மகள்மேல் ஏற்றினை வீண்பழி உன்னை நம்புதல் ஒண்ணா தினியென மன்னன் கடிந்திட, மயங்கினான் காடவன்; இஞ்சி தின்ற இருங்குரங் காயினான்

220 அஞ்சி மன்னனின் அடியிணை பணிந்தான். கன்னியும் காளையும் காடவன் போட்ட தூண்டிலில் விழாமல் துள்ளி மறைந்ததால் வேண்டா வெறுப்பொடு வேந்தன் சென்றனன் மைய இரவில் மன்னர் வந்து

225 பைய வேவு பார்ப்பதால், அமராவதி முன்னிர வதனில் வரும்படி மொழிந்ததால் நன்னர் அம்பி நண்ணினன் அங்ஙனே; காதலர் இருவரும் முன்னிராக் களித்துப் போதல் செய்தனர் பூரிப் புடனே.

230 அவர்தாம் சென்றபின் நடுவிரா வதனில் இவர்தாம் வந்ததால் ஏமாந் தனரே. "கள்ளன் பெரியனா? காப்பான் பெரியனா?" கள்ளனே பெரியன் என்றிது காட்டுமே!


208. புரையறு காதலர் - மாசற்ற தூய்மையான காதல் கொண்டவர்களை; புல்லச் செய்த - ஒருவரையொருவர் தழுவச்செய்த. காமன் - மன்மதன். 211. அமைச்சு - அமைச்சன். குரங்கு - பெரிய குரங்கு. 224. மைய இரவு - நடு இரவு. பைய - மெள்ள; வேவு - உளவு, ஒற்று. 226. முன்னிரவு - இரவின் முற்பகுதி (இரவு சுமார் 10 மணிக்குள்). 227. அங்ஙனே - அவ்வாறே. 232. முழுதும் - ஒரு பழமொழி.