132
அம்பிகாபதி காதல் காப்பியம்
பகவன் முதற்றே உலகு”
என்றவள் கூற, இறுதியும் கூறென,
இறுதியை நீரே இயம்புக என்ன,
“ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
180 கூடி முயங்கப் பெறின்”
என்பது இறுதிக் குறளாம்; இதன்பொருள்
அன்புடன் கூறென அம்பி வினவ,
அன்புடை நீரே அறிவிப் பீரென,
இன்புடன் பொருளை இனிது கூறுவான்;
185 “ஊடுவது காமத்திற்குப் பேரின்பம்; பின் தழுவிப்
புணரப்பெற்றால், அஃது, அப் பேரின்பத்திற்கு மிகவும்
பேரின்ப மாகும்.”
என்பது இதன்பொருள் என்று மொழிந்து,
ஊடல் தீர்ந்ததோ? உப்பால்[187] இருவேமும்
கூடல் தகுமோ என்றவன் கூற,
வாடல் கொண்டவனிதை உடனே
190 மூடி வாயை முறுவல் பூத்தாள்.[190]
அம்பி அதன்பின் அவள்மடி படுத்தான்;
அம்பியின் தலையை அவள் தன் கையால்
அணைத்துக் கொண்டாள்; அதன்பின் என்ன!
இணைத்த நிலையில் இருபெருங் காதல்
195 அன்றில் புள்ளென[195] அகவுணர் வுந்த
ஒன்றி முயங்கினர் உலகை மறந்தனர்;
மதுவுண் ஞிமிறென[197] மயங்கித் திளைத்தே
இதுவரை யறியா இன்பச் சுவையினை
முதன்முதல் கண்டனர் முதலிர வினிலே.
200 சுவைகண்ட பூனை சோம்பி இருக்குமா?
187உப்பால்-இனிமேல்.^ 190முறுவல் பூத்தாள்-புன் முறுவல் செய்தாள்.^ 195அன்றில் புள்-அன்றில் பறவை.^ 197மது-தேன்; ஞிமிறு-வண்டு.^