பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21. அம்பிகாபதிக்குக் கம்பரின் அறிவுறுாஉக் காதை

மறுநாள் கம்பர் மகற்கு மனையில்
அறிவுரை அளித்துத் திருத்த லானார்:
அம்பிகா பதியே வருகென அழைத்துத்
தம்பக் கலிலே தகவுற அமர்த்தி

5 நென்னல் மன்னனின் நிறைவிருந்ததனில்
என்ன புரிந்தாய் ஏற்குமோ நமக்கே?
மின்னுவ எல்லாம் பொன்னல்ல தம்பி!
அமரா வதியை அறவே மறந்திடு
நமருள் ஒருத்தியை நன்மணம் புரிந்துகொள்.

10 எல்லாப் பெண்ணிடமும் இருக்கும் உறுப்புகள்
எல்லாம் ஒத்தன இதைநீ உணர்மதி.
இரவில் இவளவள் என்ற வேற்றுமை
அறவே யில்லை அறிதியிந் நுட்பம்.
செப்பக் கூடாச் செய்தி யிதனையும்

15 தப்பில் புலத்தொடு தரம்பிரித் துணரும்
பகுத்தறி வுடைய பாவல னாலின்
தொகுத்திங் குனக்குத் தோன்றச் சொல்கிறேன்.
மேனி மினுக்கில் ஏமாந்து மயங்கல்
மான மிலார்செயல்; மகனே ஒர்தி!

20 இருபதாம் அகவையில் இருக்கும் ஒருத்தி
அறுபதாம் ஆண்டிலும் அவ்வா றிருப்பளோ?
அணிபெறச் சாத்தனர் அருளி யுள்ள


தலைப்பு: அறிவுறூ உ - அறிவுரை கூறுதல். 1. மகற்கு - மகனுக்கு. 5. நென்னல் - நேற்று. 9. நமருள் - நம்மவருள். 11. உணர்மதி - மதி - முன்னிலே அசை. 15. புலம் - புலமை. 20. அகவை - வயது.