பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரப் பூச்சால் அரசன் ஆய்வு செய்த காதை 154


பட்டி மன்றம் பாங்குறத் தொடங்கினர்;
அனைவரும் பிரிந்திரண் டணியாய் அமர்ந்தனர்;
திருக்குறள் தெளிந்த அறநூல் என்பதும்

100 திருக்குறள் தெளிநய இலக்கியம் என்பதும்
இரண்டுபேரணியினர் எடுத்துள தலைப்பாம்;
அரண்செயும் குறள்களை அவரவர்கூறித்
தத்தம் கொள்கையைத் தகவொடு நாட்டினம்.
மொத்தப் பேச்சும் முடிந்ததும் திருக்குறள்

105 இலக்கிய நயஞ்செறி இன்னற நூலென
விளக்கிக் கூத்தர் விளம்பினர் முடியினை.
மன்னன் கேட்டு மகிழாது மகிழ்ந்தனன்
தன்னெஞ் சிலேமுள் தைத்துக்கொண் டிருப்பதால்,
பின்னர்ப் பேரவை பிரிந்து கலைந்தது.

110 மானம் போனதை மன்னன் அறிந்ததால்
ஊன முற்ற ஒள்ளிழை நைந்து
போனமானத்தைப் பொருந்த மீட்கும்
சிறந்ததோர் வழியைத் தேடினள் உளத்துளே,
கறந்தபால் ஆன்முலேக் காம்புக் கேறுமோ!


97. பட்டி மன்றம் - வாது செய்யும் பேச்சரங்கம். 98. அணி - கட்சி. 103.அரண்செயும் - தத்தம் கருத்துக்கு வன்மையூட்டுகின்ற. 105 இன்னற நூல் - இனிய அற நூல். 108. நெஞ்சிலே முள் தைத்தல் - மகளது மானம் பறிபோனசெய்திஉள்ளத்தைஉறுத்துதல் 111. ஊனம் - குறைவு; ஒள்ளிழை - அமராவதி. 114. ஆன் -பசு; முலேக் காம்பு - பால்மடிக் காம்பு