பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அம்பிகாபதியைக் கொல்ல அரசன் சூழ்ந்த காதை 159


யானுமென் மனைவியும் எம்மகன் தனக்கே
உம்மகள் அமரா வதியை உவந்து

25 மணமது முடிக்க மனமது கொண்டதால்
மணம்பேச வந்துளேன் மாற்றம் யாதெனக்
குணம்பெறு கம்பர் கூறிட, வேந்தன்,
'கடகட' என்று கடுமையாய் நகைத்துச்
'சுடசுட' பதிலும் சொல்ல லுற்றான்:

30 யானையும் பூனையும் யாங்ஙனம் ஒக்கும்?
வீணெனக் கூறுவல் உமது விருப்பம்.
அடுப்பதோ உமக்கிது ஆரிடம் கேட்கிறீர்?
துடைப்பந் தனக்குத் தூய பட்டுக்
குஞ்சமா வேண்டும்? கொதிக்கிற துள்ளம்.

35 நஞ்சமாய் வந்தெனை நாணச் செய்கிறீர்.
மாண்பிலாப் புலவரே மரபு யாதும்
காண்ப தில்லையோ கண்மூடிக் கொண்டே
எதுவும் பேசலாம் என்பது முறையோ?
இதுவும் மறிவிற் கெட்டாத தேளுே?

40 கத்தரிக் காயைக் கடையில் கொளல்போல்
இத்தையும் நினைத்திரோ இயல்பிலாப் புலவரே!
மன்ன ரொடுகுடி மக்கள் ஒப்பரோ?
மன்னர் குலத்தொடு மன்னர் குலமே
கொண்டு கொடுப்பது மரபெனக் கொள்வீர்.

45. எனவே எங்குலம் ஏற்கலாம் என்று
கனவுங் காணீர் கடுகிச் செல்கென
விரட்டியும் கம்பர் விடாது வேண்டுவார்:
திரட்டிநுங் கருத்தைத் தெரிவித்து விட்டீர்
எனது கருத்தை இயம்புவன் கேண்மின்:

50 இனிதே ஒருவனும் ஒருத்தியும் இணைந்தபின்
சாதியே சமயமோ சாட்டுதல் தகுமோ!
நீதி யென்னெனின் நிலைத்த காதலரை


25. மணமது - திருமணம்; மனமது - உள்ளத்தில். 28. மாற்றம் - பதில். 46. காணீா் - காணாதீா் கடுகி - விரைந்து.