பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/181

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

அம்பிகாபதி கடவுள் பாடல் பாடிய காதை

வண்டி குலுங்கிய போதெலாம் வனிதையின்
தண்டரள மாலையும் தனங்களும் குழைகளும்
125 குலுங்கி யசைந்து கொண்டேயிருந்தன.
நலங்கிளர் அலங்காரத் தலையையுந் நங்கை
வெளியில் நீட்டி வேடிக்கை பார்த்தாள்;
நெளியும் அவள் தலை நெஞ்சில் பதிந்தது.
உள்ளே வந்ததும் உண்மைப் புலவனாம்
130 கள்ளனும் வந்தகக் கவியொன்று கேட்டான்.
உளமதில் பதிந்த ஒப்பில் காட்சியை
வளமுறப் பாடலாய் வடித்தேன் அஃதிதோ ;
"சற்றே பருத்த தனமே குலுங்கத் தரளவடம்
துற்றே யசையக் குழையூ சலாடத் துவர்கொள் செவ்வாய்
135 நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங் காரம் புறப்பட்டதே".
என்று பாடி ஈந்தேன் அவற்கு.
நன்றென வாங்கி நடையைக் கட்டினான்.
அரசர் செய்த சூழ்ச்சி அஃதென
140 உரைசெய வேண்டுமோ வுண்மை யிஃதே.
ஈங்கியான் எழுதி ஈந்த நூறாம்
பாங்குறு பாடலின் ஓலையைக் கிழித்தனர்;
ஆங்கியான் எழுதிய அகப்பா அமைந்த
ஓலைகுப் பையாவால் உவந்து பெற்றே
145 ஈற்றுப் பாடலாய் இணைத்துத் தந்தனர்:
மாற்றிதில் வேறிலை மறுக்கவொண் ணாதே.
இன்னும் நற்சான் றியம்புவன் கேண்மின்:
நுண்ணிதின் இயற்றிய நூறாம் பாடலில்
என்னுடை வேண்டுகோள் இருக்கக் காணலாம்.
150 தொண்ணூற் றொன்பது தொடர்பா டல்களில்

130, வந்தகக்கவி - வந்து அகக்கவி; அகக் கவி - அகப் பொருள் கருத்து அமைந்த பாடல். 143. ஆங்கு - அங்கே என் வீட்டில்; அகப்பா - சிற்றின்பப் பாடல்.