பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

அம்பிகாபதி காதல் காப்பியம்

மறுத்தல் இயலா மாண்பிதே யவனைப்

205 பொறுத்துக் கொள்ளப் போது மானது;
வீணாய்க் கொல்லலை விடுத்தே யவற்கு
வாணாள் ஒறுப்பு வழங்கலாம் என்றார்.
அரசன் நின்றே ஆசாற் றொழுது,
பரசும் பெரியரே! பாவலன் என்பதால்

210 குற்ற வாளியைக் கொல்லாது விடுதல்
உற்றவென் னாட்சிக் குகந்த தன்றால்;
இந்தத் தீர்ப்பே இறுதி யானது;
வந்தெனை மறிக்கா தீரென வணங்கி,
அங்கே யாரவர் அடைக இங்கெனத்

215 தங்களே வலரைத் தட்டி யழைத்தே,
அம்பிகா பதியை விலங்கிட் டழைத்துச்
சென்றே அடைப்பீர் சிறையில் இன்னே!
என்றாணை யிட்டே இயம்புவான் மேலும்:
நாளை மறுநாட்கு மறுநாள் பிற்பகல்

220 வேளை தவறாதிவ் வெறியனை வல்லே
தூக்கி லிட்டுத் தொலைக்கெனச் சொல்லி
நோக்கா தியாரையும் நொடியில் சென்றனனே.


304. மாண்பிதே - மாண்பு இதே - அம்பிகாபதி சபையில் உண்மையை நிலைகாட்டிய பெருமையாகிய இதுவே. (அல்லது) தமிழ் வளர்க்கும் புலவன் அவன் என்னும் சிறப்பாகிய இதுவே. 207. வாணாள் ஒறுப்பு - ஆயுள் தண்டனை. 209. பரசும் - போற்றற் குரிய. 215. தட்டி - கையால் தட்டி அல்லது வட்ட மணிக் கலத்தைக் குறுங்தடியால் தட்டி. 317. இன்னே - இப்போதே. 220. வல்லே - விரைந்து. 221. தொலைக்கென -தொலைக்க என - தொலைப்பீராக என்று.