பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/202

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200 அம்பிகாபதி காதல் காப்பியம்


அகன்றிட, மழிசை யாழ்வார் அவன்பின் சென்றிடத் திருமால்
200 அகன்ற ஆழ்வார் பின்னே அகன்ற தறியா யோநீ!
வெம்பிய ஆழ்வார் அருளும் வியன் தமி ழின்பின் சென்றோன்
அம்பிகா பதியின் தமிழ்க்கா அவனையும் அருளொடு காக்கவே"

(முருகன் மீது)



(10) "அரக்கரை வென்றே நல்ல
அன்பரைக் காத்த முருகா !
உருக்கமாய்ப் பாடிய கீரனின்
உயிரினைப் புரந்த புலவா!
205 மறுக்கமில் காதல் வள்ளியை
மணந்த காதல் மன்னா!
இரக்கமில் சோழனைத் திருத்தி
இனியவம் பிகாபதி காக்கவே!

என்று பாடியும் குரவை யாடியும்
மன்றாடி வேண்டினர் மன்னு கடவுளரை ;
பல்வகை உண்டி படையல் செய்து

210 நல்வகை விழாவினை நடாத்தினர் சிறப்பொடு.
மன்னனைக் காண மறுநாட் காலை
பொன்னனை புலவர் கம்பர் போந்தார்;


199. அகன்றிட - கணிகண்ணன் கச்சியை விட்டு நீங்க; அவன்பின் - கணிகண்ணன் பின்னே; பல்லவ மன்னனால் விரட்டப் பட்டு அகன்ற கணிகண்ணன் பின்னே சென்ற திருமழிசையாழ்வாரின் பின்னே திருமாலும் சென்றுவிட்டாராம். 201 வெம்பிய - கணிகண்ணனின் பிரிவால் வெம்பி வருந்திய. 204. திரு முருகாற்றுப்படை பாடிய நக்கீரன்; கொல்ல வந்த பூதத்தைக் கொன்று கீரனை முருகன் காத்தாராம். 205. மறுக்கம் - மாறுபாடு; காதல் மன்னனாகிய முருகன் காதல் கலைஞனாகிய அம்பிகாபதியைக் காத்தவ் கடமையாகும். 212. பொன்னனை - பொன் அனை - பொன் போன்ற.