பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கடவுள் வழிபாட்டுக் காதை 261


அம்பிகா பதியின் ஆருயிர் அருள்கௌ
வெம்பிப் புலம்பி வேண்டினார் வேந்தனை.

(அரசன்)



215 ஒருவரை யிப்போ துயிர்பிழைக் கச்செயின்
வருவர் மற்ற குற்றவா ளிகளும்;
அனைவர்க்கும் விடுதலை அளிக்கின், பின்னர்
எனையெவர் மதிப்பர்? என்னாம் தீர்ப்பு?
என்று மன்னன் எடுத்து மொழிய,

(கம்பர்)



220 அன்னை தமிழ்க்கா அரும்பணி புரியும்
என்னுறு மகனுக் கீயின் விடுதலை
மன்ன ரைத்தமிழ் மாநிலம் போற்றும்
என்று கூறி இறைஞ்சிக் கம்பர்
மகனது உயிர்க்கா மன்றாடிப் பார்த்தார்.
225 குகனே வரினும் கூறியது மாற்றேன்
என்றுரைத்து வேந்தன் எழுந்துசென் றனனே.
"முழவதிர் வேந்தனின் அரண்மனை முட்டை
உழவரின் அம்மியை உடைக்கும்" எனுமொழி
உண்மை யாமென உணர்ந்த கம்பர்
230 நன்மை பெறாஅமே நடைதளர்ந் தேகினரே.


225. குகன் - முருகன். 227. முழவதிர் - முழவு அதிர்- முழஷ என்னும் இயம் (வாத்தியம்) முழங்குகின்ற. 227. முட்டை - கோழி முட்டை.