பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206 அம்பிகாபதி காதல் காப்பியம்


95 "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து' எனும் தகுதி
கொள்ளும் நினது குறிக்கோள் தோற்பினும்
உனது மறச்செயல் உலக வரலாற்றில்
இனிது தக்க இடம்பெறல் உறுதி;

100 என்றுகண் ணீரொடு இனைந்த கம்பர்
நின்றதன் கவலையை நீஇட விடாஅமே
திசைமாற்றம் செய்து திருப்பினார் உளத்தை.
இசைமிகு புலவர்க் கிஃதே யழகாம்.
வெளியில் காட்டா விடினும் வேதனை
105 உளியெனப் பொளிந்திடும் உளத்தை உள்ளே!

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்"எனல் பொய்யோ!

(புலவர்களின் பொருமல்)



உயிரது பிரிந்த அம்பியின் உடலை
உயரிய புலவோர் உற்றுச் சூழ்ந்தனர்;

110 பொருமித் தேம்பிப் புலம்பிய பேரொலி
உருமென, விண்மீன் உதிர எழுந்தது.
பலரும் பற்பல பகர லாயினர்:
மலரும் போழ்தே மாய்ந்த புலவனே!
யாமெதைக் கேட்பினும் எழுதித் தருவாய்.

115 ஆமெனும் முன்னே அலகில் பாக்கள்
தந்தையைப் போலவே தந்திடும் புலமை
மைந்துடை அறிஞனே மாண்டு போதியோ!


95-96: குறள். 100. இனைந்த - வருந்திய.101. நீ இடவிடாஅமே - நீள விடாமல் (உயிரள பெடைகள்). 100. அடைக்கும் தாழ் - அஃடக்கும் தாழ்ப்பாள்; ஆர்வலர் - அன்புடையவர். 107 புன்கணீர் - சிறு கண்ணீரே; பூசல் தரும் - ஆரவாரப்படுத்தி அறிவித்துவிடும் (குறள்). 111. உருமென இடியென: விண்மீன்- நட்சத்திரங்கள். 116 - 117. புலமை மைந்து - புலமையாற்றல். 4