பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அம்பிகாபதி காதல் காப்பியம்

150 அணுகிப் பொருள்களை அளக்கும் ஆர்ப்பொலி,
தொகுத்த உணவைத் தொல்புகழ் மரபினர்
பகுத்துப் பலரோ டுண்ணும் பண்பொலி
இன்னபல் லோதைகள் இயைந்து மயங்க
மன்னிய குடியெலாம் மகிழ்வொடு வாழுமால்.

155 நன்னர் நலவளம் நனிதவ நண்ணிய
பொன்னகர்ப் புகழெலாம் புகலுதல் அரிதே!

150. ஆர்ப்பு - ஆரவாரம். 158. ஓதை-ஓசை. 154. வாழுமால் - வாழும் + ஆல்; ஆல் - அசை. 155. நன்னர் - நன்மை; நனிதவ - மிகமிக.