பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசன் அம்பிகாபதியை அழைத்த காதை

35

நன்று நன்றென நனிமகிழ் வுற்றே
அம்பிகா பதியை அருகில் அழைத்து,
தம்பி! மன்னனின் தக்க விருப்பைச்
சிறக்க ஏற்றிடச் சென்றுவா என்றனன். 

25 பறக்கச் சிறகுகள் படைக்கப் பெருமையால்
அம்பி காபதி அரண்மனை நோக்கி
விரைவாய் நடந்தனன் வேந்தன் மகளைத்
தரவே தகுமெனத் தவறா யெண்ணினன்;
காம நோய்க்குக் கருதிடும் கண்ணிலை

30 ஆமது ஆன்றோர் அறைந்த உண்மையே!

(அம்பிகாபதி வணங்கிக் கூறுதல்)

வேந்தர் வேந்தே வெல்கநும் கொற்றம்
தீந்தமிழ்ப் புலவோர் திறந்தெரிந் தவரைப்
போற்றிடும் உமது புகழ்சால் பண்பு
சாற்றுதற் கரிதோ சாலுமென் வணக்கம்

35 ஏற்றருள் கென்றனன். எழுந்தனன் மன்னன்

(அம்பிகாபதிக்கு அரசன் கூறுதல்)

புலிக்குப் பிறந்த பூனைக் குட்டியே
அரிமா பெற்ற அற்ப நரியே
கம்பர் மகனாநீ காமப் பெட்டகமே
வம்பப் பேயே வால்குழை நாயே

40 புலவ னல்லனி புன்புலால் விரும்பும்
புலையனே யாவை நீ புகன்றிடு கேட்பதை
நேற்றைய இரவில் நிகழ்ந்த தென்னவோ?
மாற்றா துண்மையை மறைக்கா துரைத்திடு
அமரா வதியை அழைத்தனை யாமே

45 எமராங் கிருந்திடின் என்னவாம் உன்தலை?

30. அறைதல் - சொல்லுதல். 37. அரிமா - சிங்கம். 88. பெட்டகம் - பெட்டி. 41. புலையன் - கீழ்மகன்.