பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காதலர் உரையாடு காதை

69

(உரை)

“பல கலைகளை அறிய அறிய இன்னும் அறியாதவையே மிகுதி என உணர்வதுபோல, சிவந்த அணிகள் பூண்ட இவளைத் தழுவத் தழுவ, இவளிடம் பெறவேண்டிய இன்பங்கள் இன்னும் உள்ளமை அறியப்படும்.”

அதாஅன்று,
88 தேரத் தேரத் தித்திக்கும் தமிழ்போல்
ஆர ஆர அமிழ்தாம் இவளது
 
90 சீரார் வாயெனச் சிறப்பாய்க் காதலன்
பாராட் டியதாய்ப் பாடினன் ஒருகவி.
வள்ளுவம் முதலிய வாய்மொழி அறிதியோ?
கொள்ளக் கொள்ளக் கூர்வது காமம்
பழகப் பழகப் புளிப்பது ஆன்பால்

95 பழகப் பழகக் காமத்துப் பாலோ
இனித்த வாறே இருக்கும் என்ப;
நுனித்துணர் வோர்க்கே நுட்பம் தெரியுமாம்;
எனவே இருவரும் இன்பம் துய்ப்பதில்
இனியோர் தடையும் இல்லை யென்ன,

(அமராவதி)

100 அன்னது சரிபொறுத் தருளுக அம்பி!
மன்னன் மகளியான் மானம் பெரிதால்,
இன்னும் சின்னாள் தள்ளி இணையலாம்.
நம்மைக் கெடுக்க நயவஞ் சகருளர்;
சிம்மன் என்னிடம் செய்துளான் வம்பு;

105 நும்மைத் தாரகை நோகச் செய்துளாள்.
இன்ன இருவர்க் கேற்ற பாடம்
முன்னர்க் கற்பிக்க முயலுதும் என்ன,

87. அதாஅன்று - அதுவல்லாமலும். 88. தேரத்தேர-ஆராய ஆராய. 89. ஆர ஆர - அனுபவிக்க அனுபவிக்க. 93. கூர்வது - மிகுவது. 94. ஆன்பால் - பசுவின்பால். 97. நுனித்து - கூர்ந்து.