பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

அம்பிகாபதி காதல் காப்பியம்

 

எதற்கும் அவரை இன்றுதுய்த் தறிவேன்.
என்ன உடையினை இன்றுயான் அணிவது?

55பொன்னின் இழைநூல் பொதிந்தபொற் புடைவை:
மின்ன நடக்கின் மேனியில் அஃது
'மொரமொர' என்று முணுமுணுத் திடுமே;
கைவளை அணியின் கட்டி அணைக்கையில்
கலகல ஒலிப்பால் காட்டிக் கொடுத்திடும்;

60மேகலை பூட்டி மெல்ல நடப்பே
னாகிலும் அதனொவி அறியச் செய்திடும்;
காலில் சிலம்பு கட்டி நடக்கின்
ஓலமிட் டூரெலாம் உணரச் செய்திடும்;
அணியும் ஆடையும் எளிமையாய் அணியினே

65துணிவொடு இன்பந் துய்த்து வரலாம்;
என்றெலாம் எண்ணி ஏற்ப அணிந்து
துன்றநள் ளிரிரவு துணிந்து சென்றனள்.
காவகத் துள்ளே காதலன் முன்னே
தூவகத் துடனே தோன்றக் கண்டனள்.

70வணக்கம் செய்தனள்; வருக என்றனன்.
இணக்கமா யிருவரும் இனியதோர் இலஞ்சியின்
கரையிலமர்ந்து கலந்துரை யாடினர்.
தரையில் ஊன்றிய தன் வலக் கையில் நெ
ருஞ்சிமுள் ளொன்று நேருறத் தைத்ததை

75வருந்தினள் போல வனிதை காட்டி
அம்பிகா பதியை அகற்றச் சொன்னாள்.

(அம்பிகாபதி)


நினதுகை யான் தொடல் நேரிய தன்று
மணமது நிகழுறுங் காலை மகிழ்ந்து


58. துய்த்தல் - அனுபவித்தல். 60. மேகலை - பொன்னால் செய்யப்பெற்றுச் சுற்றிலும் மணிகள் தொங்க ஒருவகை ஒலிசெய்யும் "ஒட்டியாணம்’ என்னும் இடுப்பு அணி. 68, ஓலமிடுதல் - முறையிட்டு ஒலித்தல். 67. துன்ற - பொருந்த 69.தூவகம்-தூய்மையான மனம். 71. இலஞ்சி - குளம். 75. வனிதை - பெண்.