பக்கம்:அம்பிகாபதி காதல் காப்பியம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அமராவதி பெற்றோரொடு அளவளாவிய காதை

95

65 (6)
மக்கள் மகிழும் வண்ணம் மணமது செய்வித்தே
மிக்கநல் லறங்களை மேதினியில் புரிய வைத்தே
மக்க ளெனும் பெயர்க்கே மாண்பொருள் தரச்செய்யும்
தெய்வமும் வேறும் உண்டோ
70பெற்றோரினும் பெரிய
தெய்வமும் வேறும் உண்டோ.'

என்ற பாவினை இனிக்கப் பாடினள்.
இசையைச் சுவைத்தபின் இனியதம் மகட்கே
இசையைச் சேர்த்துப் பெற்றோர் இருவரும்
வாழ்த்திய பின்னர், வகையாய் நகைப்பில்

75ஆழ்த்த எண்ணி அரசன் கூறுவான்:
அமரா வதிநீ அறியாப் பிள்ளையாய்
அழுதபோ தெலாமுன் அன்னை தாலாட்டு
அழுது பாடுவாள்; அதற்குநீ அஞ்சி
அன்னையே பாடுதல் அறவே வேண்டா

80என்னை அமைதியாய் இருக்க விட்டிடு;
பாடல் இன்றியே படுத்துயான் உறங்குவேன்;
ஒடச் செயாதே உனதுபாட் டாலென
அன்னைக் குரைப்பாய்; அத்துணை இனிமையாய்
உன்னைத் தாலாட்டி உறங்கவைப் பாளென

85மொழிந்து மன்னன் முடித்திட, அனைவரும்
விழுந்து விழுந்து வெடிநகை புரிந்தனர்.

(அன்னை கூறல்)


என்றும் கேலி என்பால் செய்தலே
உன்றன் தந்தைக் குரிய வழக்கம்
என்று மாதேவி இயம்பிய பின்னர்,

90இன்பம் இன்பம் இன்பம் அதன்பின்
துன்பம் துன்பம் துன்பம் என்னும்


66. மேதினி - உலகம். 67, மாண் பொருள் - சிறந்த அர்த்தம். 73. இசை - புகழ். 74. நகைப்பு - சிரிப்பு. 79. அறவே - முற்றிலும். 86. வெடிநகை - வெடிப்பது போன்ற பெருஞ் சிரிப்பு.