பக்கம்:அம்புலிப் பயணம்.pdf/135

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அம்புலிப் பயணம்

கொண்டே ஆராய்ச்சிகள் நடத்தி வந்தார். ஜான் யங்கும் சார்லஸ் டியூக்கும் அம்புலித்தரையில் இறங்கி ஆய்வுகள் நடத்தினர். இவர்கள் சந்திரனில் இறங்கிய ஒன்பதாவது, பத்தாவது அமெரிக்கர்களாவர். இவர்களுள் ஜான் யங் 1965 மார்ச்சு மாதம் வர்ஜில் ஐ கிரிஸம் என்பவருடன் ஜெமினி - 3 விண்வெளிக் கப்பலில் சென்றவர். ஜெமினி-10 பயணத்தில் தலைமை விமானியாக இருந்தவர். மற்றைய இருவருக்கும்[1] இதுவே முதல் விண்வெளிப் பயணம் ஆகும். ஆனால் அம்புலியின் 'டெஸ்கரேட்டஸ்' என்ற மலையின் மீதுள்ள பீட பூமியில் முதன்முறையாக இறங்கியவர்கள் என்ற வகையில் இவர்களது சாதனை விண்வெளி ஆய்வு வரலாற்றில் ஒரு தளிச்சிறப்புப் பெறுகின்றது.

இந்தப் பயணத்தில் பல அறிவியல் சோதனைகள் மேற் கொள்ளப்பெற்றன. அச் சோதனைகளுக்கான கருவிகள் விண்வெரி வீரர்கள் திரும்பிய பிறகும் அங்கேயே விட்டுவிடப் பெற்றன. அவை தெரிவிக்கும் செய்திகள் வானொலி அலைகள் மூலம் பூமிக்கு வந்து கொண்டிருக்கும். சில சோதனைகள் அப்போலோ - 11 முயற்சியோடு தொடங்கியவையே. இப்பயாணத்தில் அம்புலித் தரையில் நடத்தப்பெற்ற சோதனைகள் வருமாறு :

1. புவிஸி ; இஃது அம்புலி அல்ட்ராவயலட் காமிரா! ஸ்பெக்ட்ரோ கிராஃப் (யுவிஸி) புகைப்படக் கருவியும் தொலை

  1. இவர்களுள் கட்டிங்கிலி என்பார் அப்போலோ - 18. பயணத்தில் ஜெர்மன் தட்ட காலம்மை தாக்குதலின் காரணமாக அனுப்பப் பெறவில்லை என்பதும், அவருக்குப் பதிலாக சுவிகார்ட் என்பவர் அனுப்பப் பெற்றார் என்பதும் நினைவு கூரத் தக்கவை.